தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு முன்னுரிமைகள் என்ன?

Vizhimaa
1

தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு முன்னுரிமைகள்;

தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு தமிழக அரசிலும் மற்ற துறைகளிலும் தமிழ் படித்தவர்களுக்கு எவ்வளவு முன்னுரிமைகளும் வேலை வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.Jobs and employment priorities for Tamil educated people • தமிழக அரசு பணிகளில் தமிழ் வழியில் கற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது (Persons Studied In Tamil Medium Act - 2010)
 • இந்திய ஆட்சிப் பணியான( IAS) முதன்மை தேர்வுகளில் கட்டாய இந்திய மொழித்தாள்கள் வரிசையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது. கட்டாய மொழித்தாளை எழுதி முடித்து குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே ஐஏஎஸ் தேர்வுக்கு எழுதுபவர்கள் மற்ற வினாத்தாள்களை எழுத முடியும்.
 • தமிழ் பட்டதாரிகளும் பிற பட்டதாரிகளும் இந்திய ஆட்சிப் பணிக்கான முதன்மை தேர்வில் அனைத்து தாள்களையும் தமிழிலேயே எழுதி வெற்றிபெற முடியும் ஆங்கிலத்தாள் தவிர மற்ற அனைத்து தாள்களையும்  தமிழிலேயே எழுதி தேர்வாக முடியும். நேரடி ஆளுமை தேர்விலும் தமிழிலேயே பதிலளிக்கலாம்.
 • துணை ஆட்சியர் பதவிக்கான குரூப்-1 தேர்வில் 300 மதிப்பெண் கொண்ட இரண்டாம் தாளில் 90 மதிப்பெண் வினாக்கள் தமிழ் மொழி மற்றும் பண்பாடு என்ற பாடத்தில் இருந்து கேட்கப்படுகின்றன.
 • ஆசிரியர் பணிக்கான TET மற்றும் CTET மற்றும் TRB தேர்வுகளில் தமிழுக்கும் தமிழ் பட்டதாரிகளுக்கும் வாய்ப்புள்ளது.
 • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 கிராம நிர்வாக அலுவலர் விஏஓ இளநிலை உதவியாளர் போன்ற பணிகள், குரூப்-2 ஏ மற்றும் குரூப் 2 (தலைமைச்சயலக உதவிப் பிரிவு அலுவலர், சார்-பதிவாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல சார்நிலை பணிகள்) இந்த பணிகளுக்கான எழுத்துத்தேர்வு 300 மதிப்பெண்கள் இதில் சரிபாதி 150  மதிப்பெண்களுக்கான கேள்விகள் பொதுத் தமிழ் பாடத்திலிருந்து கேட்கப்படுகின்றன. இந்த பாடத்திற்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களே அடிப்படை.
 • மொழிபெயர்ப்புத் துறையிலும் படைப்புத் துறையிலும் ஆர்வத்துடன் தமிழ் பயின்ற தகுதி மிக்கவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன
 • மொழிநடை திருத்துனர் copy editor, கலைச்சொல் வல்லுனர், திரைத்துறையில் துணைத் தலைப்புகள், வசனங்கள் எழுதுபவர் போன்ற பணி வாய்ப்புகளை தமிழ் ஆங்கிலம் என்னும் இரு மொழிப் புலமை பெற்றவர்களும் பெறமுடியும்
 • நல்ல உச்சரிப்பு திறன் கொண்டவர்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகலாம்
 • புத்தக வடிவமைப்பு தமிழ் ஆங்கிலத் தட்டச்சு மற்றவர்களுக்கு பதிப்புத் துறையில் அதிக பணி வாய்ப்புகள் உள்ளன
 • தமிழ் கணினியம் Tamil computing கலைச்சொல் உருவாக்கம் இணையத்திலும் இணைய கலைக் களஞ்சியங்களிலும் கட்டுரை எழுதுதல், பிழை திருத்தல் பிழை திருத்தம் மென்பொருள் உருவாக்கம் போன்ற பணிவாய்ப்புகள் உள்ளன.
 • அரசுத்துறை நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்கள் பாடநூல் கழகம் போன்றவற்றில் மொழிபெயர்ப்பாளர் மற்றும் பிழை திருத்துனர் போன்ற பணி வாய்ப்புகள் உள்ளன.
 • விளம்பர வாசகம் எழுதுதல், வணிகப் பொருள் பயன்பாடு குறித்த விவரக்குறிப்பு மொழிபயர்ப்பு போன்ற பணி வாய்ப்புகளும் தமிழ் கற்றவர்களுக்கு கிடைக்கும்.
 • தமிழர்கள் வாழும் பிஜி, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளில் தமிழ் ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
 1. இணையக் கலைக் களஞ்சியங்களில் கட்டுரை எழுதுதல் மற்றும் பாடநூல் கழகத்தின் பிழை திருத்தும் வேலைவாய்ப்புகள் பற்றி கொஞ்சம் தகவல் தெரிவியுங்கள்

  பதிலளிநீக்கு
கருத்துரையிடுக
To Top