கணவனுக்கு பிறந்த நாள் மடல்

Vizhimaa
0

மாலையிட்ட நாள் முதல்

மனதில் உந்தன் நியாபகமே

எனை விட்டு தூரம் சென்றாலும்

மறக்காது உன் பூ முகமே

இடைவெளி நம் உடலுக்கு

தானே தவிர இதயத்திற்கு

இல்லை; என் இதயம் நிறைந்த

என்னவனுக்கு இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள்

அன்பான கணவனுக்கு காதல் கடிதம் படிக்க

அருகில் இருந்த வரை

உன் அருமை உணரவில்லை

நினைத்ததும் வந்து சேர முடியாத

தொலைவில் நீ இருக்கும் பொழுது

நித்தம் நினைக்கும் உள்ளம்

ஏனோ ரசிக்க தவறினோம்

அந்த அழகிய நினைவுகளை

என்று...


கணவனுக்கு பிறந்த நாள் மடல்தூக்கம் வரா இரவுகளில்

என் துணையாக உன்

நினைவுகள் மட்டும் என்னுள்

இருக்கும்...


உன் அன்பு ஒன்றே

என் வாழ்வின் அஸ்திவாரம்

உன் மனைவி என்ற பெயரே 

தற்போது என் அடையாளம்...


உனக்காக எதுவும் செய்ய

துணியும் என்னுள்ளம்

உன் அன்பில் துளி 

குறைந்தாலும் மடியும் என்

இதயம்...


இதுவரை நான் அறியவில்லை;

என் அன்பை நீ உணர்ந்தாயா? என்று,

எனக்கும் புரிந்ததில்லை;என்னை

குறை சொல்லும் காரணம் 

இன்னதென்று...


குறையில்லாத மனிதன்

இன்னும் இந்த பூமியில் பிறக்கவில்லை

குறைகளை நிறையாக்கும் கலை

காதலில் உள்ளது;உன் மீது எனக்கும் 

என் மீது உனக்கும் அந்த காதல்

நிறையவே உள்ளது...


என் காதல் கணவருக்கு

இனிய பிறந்தநாள்

நல்வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top