தன்னம்பிக்கை கதைகள்-ஏமாறாதே!

Vizhimaa
0

தன்னம்பிக்கை கதைகள்

வாழ்க்கையில் சில நேரங்களில் நம்மை அறியாமல் நம்மை சுற்றியுள்ள சில சூழ்நிலைகளால் நம்முடைய தன்னம்பிக்கை உடைந்து போக நேரிடும் அதுபோன்ற நேரங்களில் நம்மை உந்தித் தள்ளவும் உற்சாகமூட்டவும் சில கதைகள் நமக்கு உதவலாம்.உங்கள் தன்னம்பிக்கையை தூண்டும் வகையில் அமைந்த இந்த கதை நிச்சயம் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைக்கும் உதவும் என்ற நம்பிக்கையோடு இந்த கதை (Tamil Motivational Stories)

கதையின் தலைப்பு

ஏமாறாதே!

கதை;ஏமாறாதே! (தன்னம்பிக்கை கதைகள்)

Motivational stories in Tamil

ஏமாறாதே! இந்த கதையின் கதாநாயகன் ஒரு வேலை தேடும் இளைஞன். இந்தக் கதை நிகழும் இடமோ அமெரிக்கா. அமெரிக்காவில், சிறுவயது முதலே குழந்தைகள் வேலைக்கு செல்வது என்பது வழக்கமானது அதாவது அவர்களுடைய படிப்பு செலவுக்கும் மேற்படிப்புக்கு அவர்களே உழைத்து சம்பாதித்துக் கொள்வார்கள் என்பதே இங்கு பலருடைய எண்ணம். அதுபோல் வெகு நட்களாய் வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் திடீரென ஒரு சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம் என்று எண்ணினான்.

ஆனால் அதற்கு முதலில் ஒரு முதலீடு வேண்டுமே அதற்கு எங்கு செல்வது என்று தான் யோசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அவனுக்கு அவனுடைய தாத்தா கொடுத்த ஒரு பழைய புத்தர் சிலை ஒன்று நினைவிற்கு வந்தது. அது ஒரு ஆண்டிக் பீஸ் என்று தாத்தா அடிக்கடி கூறி வந்தார். அதுமட்டுமல்லாமல் இந்த சிலையை 5000 டாலர்களுக்கு விற்கலாம் என்றும் கூறி சென்றிருந்தார். 

இப்பொழுது அந்த இளைஞனுக்கு ஒரு யோசனை வந்தது. அந்த புத்தர் சிலையை விற்றுவிட்டு அதன்மூலம் கிடைக்கும் 5,000 டாலரை கொண்டு தன்னுடைய தொழிலை தொடங்கலாம் என்று எண்ணினான். முதல் வேலையாக தன்னிடம் இதுபோன்ற ஒரு ஆண்டிக் சிலை இருக்கிறது என்பதை ஆன்லைனில் பதிவு செய்தால் இதை பார்த்துவிட்டு பலரும் தன்னை தொடர்பு கொள்வார்கள் என்று எண்ணினான். இந்த இளைஞன் எண்ணியது போலவே நடந்தது, இந்த சிலையை பார்த்துவட்டு ஐந்தாறு நபர்கள் இவனுக்கு உடனடியாக போன் அடித்தனர். 

ஆன்லைனில் பதிவு செய்த உடனேயே அதாவது ஒரு ஐந்து நிமிடத்திலேயே ஒரு நபர் இந்த இளைஞனுக்கு போன் அடித்தார் அந்த நபர் தனக்கு இந்த சிலை வேண்டும் என்றும் எனக்கு இது மிகவும் பிடித்தது என்றும் இதை வெகுநாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார்.

நான் இதை ஆறாயிரம் டாலர் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறினார். இதைக் கேட்ட அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் உடனே சரி என்று ஒப்புக் கொண்டான்.

மீண்டும் ஒரு 15 நிமிட இடைவெளியில் ஒரு நபர் போன் அடித்தார் அந்த நபரும் முதலில் பேசிய நபர் போலவே தனக்கு அந்த சிலை வேண்டும் என்றும் அது மிகவும் பிடித்திருக்கிறது என்றும் கூறி தானும் அதை வாங்க விரும்புவதாக கூறினார். அந்த நபரிடம் இந்த இளைஞன் முதல் நபர் இதை 6000 டாலர் விலைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார் என்று கூறினான். அதற்கு இவர் நான் இதை 6500 டாலர்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். 500 டாலர்கள் அதிகமாக கிடைக்கிறது என்று இந்த நபருக்கு அந்த இளைஞன் சிலையை விற்கலாம் என்று நினைத்தான், இவரிடமும் சரி என்று ஒப்புக் கொண்டான்.

அடுத்து இதே போல் மீண்டும் 15 நிமிட இடைவெளியில் ஒரு நபர் போன் அடித்தார் அந்த நபரும் முன்பு பேசிய நபர்கள் போலவே இந்த சிலை தனக்கு வேண்டும் என்றும் அதை வாங்கிக் கொள்கிறேன் என்றும் விருப்பம் தெரிவித்தார். அதே போல் 15 நிமிட இடைவெளியில் மீண்டும் இரண்டு நபர்கள் போன் அடித்து தங்களுக்கும் அந்த சிலை வேண்டும் என்றனர். 

தன்னுடைய சிலைக்கு போட்டி போட்டு வாங்குவதற்கு ஆட்கள் குவிந்து கொண்டிருப்பதை பார்த்த அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் அவன் தொடர்பு கொண்ட 5 நபர்களையும் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்தான். அதில் யார் அதிகபட்ச விலையை தருகிறார்களோ அவர்களுக்கே அந்த சிலையை விற்று விடலாம் என்றும் முடிவெடுத்தான்.

முதலில் ஒவ்வொரு நபராக வரவழைக்கலாம் என்று எண்ணினான் முதல் நபரும் இவன் சொன்ன நேரத்திற்கு வீட்டிற்கு வந்தார். அவர் இந்த சிலையை நேரில் பார்த்துவிட்டு அந்த இளைஞரிடம் பேசினார் தம்பி இந்த சிலை நானும் நீயும் எண்ணியது போல் ஒரு ஆன்டிக் சிலை அல்ல. இது ஒரு டுப்ளிகேட் அதாவது பொய்யான சிலை. இதற்கு இவ்வளவு விலை கிடையாது. இதன் விலை வெறும் 500 டாலர்கள் என்று கூறினார். இந்த ஆண்டிக் சிலை உண்மையில் பொய்யானது என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

அடுத்ததாக இந்த இளைஞனை தொடர்பு கொண்ட இரண்டாவது நபரும் இந்த வீட்டிற்கு வந்தார். இந்த சிலையை பார்த்துவிட்டு அந்த இளைஞரிடம் முதல் நபர் கூறியது போலவே தம்பி இந்த சிலை ஆண்டிக் சிலை உண்மையானது அல்ல, பொய்யான சிலைதான் இதற்கு மார்க்கெட்டில் இவ்வளவு விலை இல்லை என்று கூறினார். நான் இந்த சிலையை 600 டாலர்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறினார். 

அந்த இளைஞனுக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. தன்னுடைய தாத்தா சொன்னது பொய்யோ என்று எண்ணினான் இருந்தாலும் ஓரத்தில் இந்த சிலை ஆண்டிக் சிலை தான் என்று தாத்தா கூறியது இன்னமும் அவனுக்கு உறுத்தியது. அந்த சிலையின் மீது அவனுக்கு நம்பிக்கை கொஞ்சம் இருந்துகொண்டுதான் இருந்தது. அதனால் அடுத்தடுத்த நபர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கலாம் என்று எண்ணினான்.

அடுத்ததாக மூன்றாவது நபரும் வந்து பார்த்தார் அவருக்கும் அந்த சிலை பொய்யானது என்று தெரிந்தது. அவரும் அந்த இளைஞரிடம் தம்பி இந்த சிலை பொய்யானது என்று கூறிவிட்டு இந்த சிலையை நான் 700 டாலர்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினான் இதை கேட்ட இளைஞனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதனால் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து போய் இருந்தான்.

இப்படி நான்காவது நபரும் ஐந்தாவது நபரும் இதையே திரும்பத் திரும்ப சொல்ல தன் சிலை பொய்யானது என்று அந்த இளைஞனும் நம்பினான். எனவே கடைசியாக வந்த வியாபாரியிடம் தன்னுடைய சிலையை வெறும் 800 டாலருக்கு விற்று விட்டான். ஏனெனில் கடைசியாக வந்த வியாபாரி மட்டும் தான் 800 டாலர்கள் அதாவது 100 டாலர் மற்றவர்களை விட அதிகமாக கேட்டதால் அந்த இளைஞன் அந்த சிலையை அந்த வியாபாரியிடம் விற்று விட்டான்.

சிலை விற்ற காசு அவனுடைய தொழிலுக்கு உதவவில்லை. அது அவனுடைய தனி செலவுக்கு மட்டுமே சரியாக இருந்தது. தன்னுடைய தாத்தாவின் பெயரில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த அந்த இளைஞனுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. சில நாட்கள் இந்த ஏமாற்றத்தை நினைத்து வருந்திய இளைஞன் பிறகு பழைய நிலைக்குத் திரும்பி மீண்டும் சொந்தத் தொழில் தொடங்குவதற்கான வேலைகளை தொடங்கினான். ஆனால் வேண்டிய பணம் புரட்டுவதற்கு இவனுக்கு ஆளும் இல்லை, என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கிய நிலையில் வீதியில் நடந்து சென்றான்.

ஒரு நாள் தன் நண்பர்களுடன் அந்த இளைஞன் ஒரு பொருட்காட்சிக்கு சென்றான் அப்பொழுது மிகவும் பழமையான பொருட்கள் விற்கும் ஒரு கடையை பார்த்தான் அதன் முன் பகுதியில் அதாவது பார்வையாளர்களுக்கு எட்டும்படியாக வைத்திருக்கும் கண்ணாடி குவளையினுள் ஒரு புத்தர் சிலை இருப்பது அவனுக்கு தெரிந்தது. அதை பார்த்த இளைஞனுக்கு தன்னுடைய புத்தர் சிலை ஞாபகத்திற்கு வந்தது.

திடீரென அந்த இளைஞனுக்கு ஒரு சந்தேகம் முளைத்தது. இந்த கடையில் இருக்கும் அந்த புத்தர் சிலை தன்னுடைய சிலையாக இருக்குமோ என்று சற்று யோசித்துப் பார்த்தான். அடுத்த நொடியே அந்த கடையினுள் நுழைந்தான். அங்கு இருந்த உரிமையாளரிடம் அந்த சிலையை பார்ப்பதற்கு அனுமதி கேட்டான். பின்பு அந்த சிலையிடம் சென்று அது தன்னுடைய சிலையா என்று பார்த்தான்.

தன்னுடைய தாத்தா தனக்கு அந்த சிலையை கொடுத்து பொழுது அந்த சிலையின் அடிப்பகுதியில் ஒரு அம்புக்குறி இருப்பதை அவன் கவனித்து இருந்தான். அதே அம்புக்குறி இந்த சிலையிலும் இருக்கிறதா என்று நிதானித்து பார்த்தான். அந்த இளைஞனுக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால் இந்த கடையில் இருக்கும் புத்தர் சிலை அவனுடைய சிலை தான் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது. அந்த இளைஞனுக்கு தூக்கிவாரிப்போட்டது ஏனென்றால் அந்த சிலையின் விலை 6000 டாலர்கள் என்று போட்டிருந்தது. வெறும் 800 டாலர்களுக்கு விற்ற இவனுடைய புத்தர் சிலை அந்த கடையில் 6 ஆயிரம் டாலர்களுக்கு என்று எழுதி இருப்பதை அவனால் நம்ப முடியவில்லை. 

தன்னை ஒருவர் நன்றாக ஏமாற்றி விட்டார் என்பதை உணர்ந்த இளைஞன் மிகுந்த கோபப்பட்டான். அந்த கடையை சுற்றி முற்றி பார்த்தான் அப்பொழுது தான் ஒன்றை கண்டுபிடித்தான் அந்த கடையில் வேலை பார்க்கும் ஒரு நபர் தான் தன்னுடைய சிலையை வாங்கியவர் என்பதையும் கண்டு விட்டான். பின்பு இந்த கடையின் உரிமையாளர் இடம் சென்று என்னுடைய சிலையை நீங்கள் ஏமாற்றி வாங்கி உள்ளீர்கள் அந்த நபர் என்னுடைய புத்தர் சிலையை பொய்யானது என்று கூறி, வெறும் 800 ரூபாய்க்கு வாங்கி வந்தார். நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று கூறினான்.

இதை கேட்ட கடையின் உரிமையாளர் தம்பி நாங்கள் உங்களை ஏமாற்ற வில்லை இது எங்களுடைய வியாபார யுக்தி. நாங்கள் எங்களுக்கு தேவையான ஒரு பொருளை குறைந்த விலைக்கு வாங்குவதற்காக இதுபோல் சில தந்திரங்களை கையாளுவோம்.

உங்கள் வீட்டிற்கு வந்த அந்த ஐந்து வியாபாரிகளுமே எங்களுடைய ஆட்கள் தான். இது எங்களுடைய வியாபார யுக்திகளில் ஒன்று என்று கூறினார் கடையின் நிர்வாகி இதனை கேட்ட இளைஞன். தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தான் இதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த விரக்தியில் நீங்கள் இப்படி செய்தால் எல்லோரும் ஏமாந்து விடுவார்களே? என்று கடையின் நிர்வாகியிடம் கேட்டான்.

அதற்கு அந்த நிர்வாகியும், எப்படி தம்பி எல்லோருமே ஏமாறுவார்கள்? "தான் வைத்துள்ள பொருளின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையும் அந்தப் பொருளைப் பற்றி தன்னிடம் இருக்கும் தெளிவும் அறிவும் உண்மையானது என்று முழுதாக நம்பும் ஒரு நபரால் எப்பொழுதும் ஏமாறவே முடியாது" என்றும் தன்னை பற்றியும் தன்னிடம் உள்ளவற்றை பற்றியும் தெளிவான அறிவும் நம்பிக்கையும் கொண்ட ஒரு மனிதன் எப்பொழுதுமே ஏமாற மாட்டான் என்று கூறினார்.

உங்களிடம் உங்கள் பொருளின் மீதும் அதை உங்களுக்கு கொடுத்த உங்கள் தாத்தாவின் மீதும் நம்பிக்கை சற்று குறைவாக இருந்ததால் நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் அவ்வளவுதான் என்றார்.

பெரும் விரக்தியுடன் அந்த வாலிபன் கடையை விட்டு வெளியே வந்தான்.வாழ்க்கையில் தன் மீதும் தனக்கு நன்றாக தெரிந்தவற்றின் மீதும் நம்பிக்கை இழந்தால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து மனம் வருந்தினான்.

கதை சொல்லும் நீதி-(தன்னம்பிக்கை கதைகள்)(Tamil Motivational Stories)

நம்முடைய திறமையின் மீதும் நம்மிடம் உள்ளவற்றின் மீதும் நமக்கு எப்பொழுதும் முழுமையான நம்பிக்கை வேண்டும்.ஒரு 5,6 நபர்கள் நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட என்று கூறினால் உடனே துவண்டு போய் தூங்கி விட கூடாது.நம் மீது அக்கறை கொண்டுள்ள மனிதர்களை முழுமையாக நம்ப வேண்டும்.பிறர் கூறுவதை உண்மை என்று அப்படியே நம்பி விட கூடாது.அரைகுறையாக எதையும் தெரிந்து வைத்துக் கொள்ள கூடாது.ஒன்றை செய்யவோ அல்லது படிக்கவோ நேர்ந்தால் அதை முழுமையாக கற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும்.சுயசிந்தனை மற்றும் சுயதெளிவு வேண்டும்.வாழ்க்கை வளமாக மனம் நிறைய தெளிவு வேண்டும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top