சுதந்திர தின வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

சுதந்திர தின வாழ்த்து கவிதைகள்


சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் கவிதைகள்;
சும்மாவா கிடைத்தது சுதந்திரம் என்பார்கள்... அது எவ்வளவு உண்மை
என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்தியா ‌சுதந்திரம் அடைய பல நல்ல உள்ளங்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் சென்றுள்ளனர்.இன்னும்‌ சிலர் சிறையில் வாழ்ந்தே தங்கள் உயிரை விட்டுள்ளனர்.இவ்வளவு சிரமப்பட்டு இந்த சுதந்திரத்த்தை நம் மூத்தோர்கள் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து செயல்படுவது சிறப்பாக இருக்கும்.


இந்த இனிய‌ சுதந்திர நாளில் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் ‌‌நடந்த நிகழ்வுகளை கவிதையாக வடித்து சுதந்திர திருநாளில் வாழ்த்து கவிதைகளாக பதிவிடப்படுகிறது.

இது சுதந்திரத்தை பெருமை படுத்தும் கவிதைகள் மற்றும் சுதந்திர தின தியாகிகளையும் கொண்டாடும் கவிதைகளாக அமைகிறது இங்கு.

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் கவிதைகள்;

சொல்லிக் கொடுங்கள்
சுதந்திரம் என்பது நம்
ஒற்றுமைக்கும் ஒருமைக்கும்
பொறுமைக்கும் தந்த பரிசு
என்று....


இந்திய சுதந்திரம்
இருளில் கிடைத்த 
புது விடியல்...


சுதந்திரத்திற்காக தங்கள்
சுவாசங்களை தியாகம்
செய்த நேச நெஞ்சங்களை
நினைத்து மகிழ்வோம்
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்


Independence day quotes in Tamil


Independence day quotes in Tamil

Independence day quotes in Tamil

Independence day quotes in Tamil

Independence day quotes in Tamil

Independence day quotes in Tamil


Independence day quotes in Tamil

Independence day quotes in Tamil

Independence day quotes in Tamil

Independence day quotes in Tamil

சுதந்திரத்தின் அருமை
உணர்வோம்...
சுடர் வெளிச்சம்
தந்த சூரர்களை
போற்றுவோம்...
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்


இந்திய‌ திருநாட்டில்
இனியாவது பஞ்சம்
பட்டினி தீர்ந்து
பாதுகாப்பாய் மக்கள்
பாசத்தை பகிர்ந்து
வாழ்ந்திட இனிய சுதந்திர
தின நல்வாழ்த்துக்கள்


தாய்நாட்டை போல்
தஞ்சம் கொள்ள
ஓர் இடம் இந்த
பூமியில் இல்லை;
தாய்க்கு இணை
எதுவும் இல்லை
இனிய‌ சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்


தமிழ் நெஞ்சங்களுக்கு
தாய் திருநாட்டின்
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்


பாறையில் சிந்திய
மழைத்துளி போல்
நம் பகைவர்கள் மறைந்த
நாளை பார் உணர
கொண்டாடி மகிழ்வோம்
இனிய‌ சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்


முன்னூறு வருட
முரண்பாட்டுக்கு
முழுக்கு போட்ட
நாள் இன்று
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்...


சுதந்திரத்திற்காக
சிந்திய ரத்தமும்
வெளியேறிய கண்ணீரும்
காயப்போவதில்லை
கால வெள்ளத்தில்
நினைத்து மகிழ்வோம்...
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்


இந்திய மண்ணின்
ஈடில்லா திருநாள்
சுதந்திர நன்னாள்...


சுதந்திர வேட்கை
விடியல் தந்த நாள்
இன்று...
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்


சுதந்திர போராட்டம்
சூரிய வெளிச்சம்
தந்த நாள் இன்று
சுடர் ஒளிகளை
போற்றிடுவோம்


நம் நாட்டின்
சுதந்திர தியாகிகளை
நம்பிக்கை 
நட்சத்திரங்களை
நினைத்து மகிழ்வோம்...


நட்ட விதைகள்
நல்லாதாகவும்
பட்ட கஷ்டங்கள்
பலன் தந்த நன்னாள்
இந்த சுதந்திர திருநாள்


தாய்‌ திருநாட்டின்
தமிழ் சொந்தங்களுக்கு
இனிய ‌ சுதந்திர தின 
நல்வாழ்த்துக்கள்


தேசம் காத்த
தேசியவாதிகளை
போற்றுவோம் 
வணங்குவோம்...


சுதந்திரத்திற்காக போராடி
சுதந்திர காற்றை
சுவாசிக்காமல் போன
நல்ல உள்ளங்களை
நினைத்து போற்றுவோம்
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்


சும்மா கிடைக்கவில்லை
இந்த சுதந்திரம்
என்பதை உணர்ந்து
ஊருக்கு சொல்வோம்
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்


சுதந்திர காற்றை
சுவாசிக்கும் நாம்
சுதந்திர தினத்தை
கொண்டாடுவதை விட
மனதார உணர்தலே 
முக்கியமானது


பலர் உயிர் தியாகம்
செய்ததால் உயிர்
பெற்றுள்ளது நம் 
தேசம்..
தேசப்பற்று ஒன்றே 
ஜாதி மத பேதமின்றி
நம்மை ஜெயிக்க
வைக்கும், இனிய சுதந்திர
தின நல்வாழ்த்துக்கள்


தேசியக்கொடியை
நெஞ்சிலும்
தேசத்திற்காக 
இன்னுயிர்
தந்தவர்களை 
நினைவிலும் சுமப்போம்...


பல பேரின் கண்ணீர்
கனவுகள் தான்
நாம் சுவாசிக்கும் சுதந்திர
காற்று...


பெற்ற சுதந்திரத்தை
பேணிக்காப்பது
பேரன் பேத்திகளாகிய
நம் கடமை...


ஒட்டுமொத்த தேசத்திற்கும்
ஒரு இனிய பொன்னாள்..
சுதந்திர திருநாள்


சுதந்திரம் என்பது 
உரிமை அல்ல, உணர்வு; 
அந்த உணர்வின் விளைவால் 
பல உயிர் தியாகங்களுக்கு 
பின் கிடைத்தது தான் 
இந்த சுதந்திர எனும் 
உரிமை; மதிப்போம்! 
மறவோம்!!! சுதந்திர 
போராட்ட வீரர்களையும் தியாகிகளையும்...


சுடும் நெருப்பாய் எரிந்து 
கடும் இன்னல்களை 
கவுரவமாய் ஏற்று 
சுருக்குக் கயிற்றை சுதந்திர உணர்வுகளுக்காக சுகமாய் 
ஏற்று உயிர்த் தியாகம் 
செய்த சுதந்திர போராட்ட 
வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்...
இந்த சுதந்திர தின 
பொன்‌ நாளில்...


அகிம்சையால் அந்நியர்களின் இம்சைக்கு முற்றுப்புள்ளி 
வைத்த இந்நன்னாளில் 
சுதந்திரத்தின் உன்னதத்தை 
உள்ளூர நினைத்து 
போற்றுவோம்... இனிய 
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...


நம் தாய் நாட்டின் 
விடுதலைக்காக தன்னுயிர் 
தந்த ஒவ்வொரு பொதுமக்களும் தலைவர்களே,இந்நன்னாளில் அத்தலைவர்களை தலைவணங்குவோம்... 
இனிய சுதந்திர தின 
நல்வாழ்த்துக்கள்!


சுயநலமின்றி சுதந்திரத்திற்காக 
போராடி நம் நாட்டை சூரையாடிய சூனியக்கார்களின் வஞ்சகத்தால் 
சுருக்கு கயிற்றை முத்தமிட்ட 
சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரையும் போற்றுவோம் 
இந்த சுதந்திர திருநாளில்!!!



சுதந்திரத்தின் மகத்துவம் 
உணர்வோம்... சுதந்திர 
போராட்ட வீரர்களின் 
தியாகங்களை மறவோம்....


அடிமையாய் இருந்த நம் முன்னோர்களுக்கு 
சுதந்திரத்தின் அருமை 
தெரிந்திருந்தது.போராடி 
பெற்று கொடுத்து சென்றனர் சுதந்திரத்தை,இன்று சுதந்திர 
தேசத்தின் பேரன் பேத்திகளாய் விளங்கும் நாம் பெற்ற 
சுதந்திரத்தை பேணிக்காப்போம் 
என்று இந்த சுதந்திர 
தினத்தில் உறுதி ஏற்போம்...

சுதந்திரம் பெறுவதற்காக 
சுயநலமின்றி போராடிய 
ஒவ்வொரு வீரர்களையும் 
போற்றுவோம் புகழுவோம் 
இந்த பொன்னாளில்...
இனிய சுதந்திர தின 
நல்வாழ்த்துக்கள்!!!


இந்த சுதந்திர தினத்தை 
இனிப்புகள் கொடுத்து 
கொண்டாடுவதை விட நம் 
தேசத்தின் ஈடில்லா சுதந்திர 
வரலாற்றை இன்றைய 
தலைமுறைக்கு உரைத்து...
உணர்வுப்பூர்வமாக 
கொண்டாடுவோம் இந்த 
சுதந்திர தினத்தை..... 
இனிய சுதந்திர தின 
நல்வாழ்த்துக்கள்...


உலகம் போற்ற உயருவோம்...
நம்மை உயர்த்த உயிர் 
தியாகம் செய்த அனைத்து 
சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் 
வீர வணக்கம் செலுத்துவோம்.... 
இனிய சுதந்திர தின 
நல்வாழ்த்துக்கள்....


நம் சுதந்திரத்தை
பேணி காக்க
எல்லையில்
பனியிலும் மழையிலும்
தேசப்பற்று எனும் தீயை
நெஞ்சில் நிறுத்தி
உரைந்து போகாமல்
உயிரைக் கொடுக்கும்
இராணுவத்திற்கு
நிமிர்ந்து சொல்வோம்
சுதந்திர திருநாள்
வாழ்த்துக்கள்


சுதந்திர தேசத்தின்
சொந்தக்காரர்கள்
நாம் என்று
கொண்டாடு



அகிம்சையின் வழியே
அதிகாரம் பெற்ற
அன்னை பூமி
நமது...

.

இந்திய வரலாற்றில்
இனிக்கும் பொன்னாள்
இன்று, சுதந்திர திருநாள்



சுதந்திரம் பெற
போராடிய ஒவ்வொரு
பொதுமக்களும்
தலைவர்களே


போராடிப் பெற்றோம்
இந்த புனித நாளை


நள்ளிரவில் மலர்ந்த
நன்னாள் இந்த
சுதந்திர திருநாள்...


இரவில் கிடைத்த
இன்னொரு விடியலாய்
சுதந்திர தினம்
கிடைத்தது


இந்த சுதந்திரம்
எத்தனை பேரின்
உயிரை பலியாக
பெற்றுக் கிடைத்துள்ளது
என்பதை உணர்ந்து
செயல்படுவோமாக...


குழந்தைகளிடம்
சொல்லி வளருங்கள்
சுதந்திரம் என்பது
ஒருவர் கொடுப்பதல்ல
உன்னுள் இருப்பது
என்று...


வருங்காலத்திற்கு
நினைவூட்டுங்கள்
சுதந்திரம் என்பது
உரிமை‌ அல்ல
உன்னுள் உதிக்கும்
ஒரு உணர்வு
என்று...


பாகுபாடின்றி
பாசம் காட்டுவோம்
இந்த சுதந்திர
திருநாளில்...


நம் வீட்டு
பிள்ளைகளிடம்
சொல்லி வளர்ப்போம்
இந்த சுதந்திரம்
சும்மா கிடைத்ததில்லை
பல சுமைதாங்கிகளின்
சுருக்கு கயிற்றால்
கிடைத்தது என்று...


இந்த மண்ணிற்காக
ரத்தம் சிந்திய
ஒவ்வொரு உயிரையும்
சிந்தித்து போற்றுவோம்


தாய் மண்ணின்
சுதந்திரம் அதுவே
அன்று தாரக
மந்திரம்


செக்கிழுத்து 
சிறை சென்று
கல்லுடைத்து 
கிடைத்தது
இந்த சுதந்திரம் 
என்பதை ஒரு நாளும்
மறவாதீர்கள்...


துப்பாக்கி முனையில்
உயிரை துச்சமென
நினைத்த பல
நல்ல உள்ளங்களால்
கிடைத்ததே இந்த
சுதந்திரம்...


மழையென பொழிந்த
குண்டு மழையில்
மாண்ட நம்
முன்னோர்களை நினைத்து
போற்றும் நன்னாள்...


ஏதோ சுதந்திரம்
கிடைத்து விட்டது
என்று இனிப்பு
கொடுத்து கொண்டாடுவதை
விட எப்படி இந்த
சுதந்திரம் கிடைத்தது
என்பதை உணர்ந்து
கொண்டாடுவது மேலானதாக
இருக்கும்



சுதந்திர வரலாற்றை
சொல்லி கொடுத்து
வளருங்கள் வீரம்
மறவாதிருக்கட்டும்
ரத்தத்தில்


மாற்றானிடமிருந்து
மீட்டு விட்டோம்
இந்த நாட்டை
இனி என்ன செய்ய
போகிறோம்...


ஒவ்வொரு முறை
சுவாசிக்கும் பொழுதும்
ஜுவித்திருக்கட்டும்
சுதந்திர எண்ணம்...

Also Read,

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top