விடுப்பு விண்ணப்பம் எழுதுவது எப்படி - Leave Letter In Tamil
இந்த பதிவை படிக்கும் அனைவருக்குமே பள்ளி நாட்களில் விடுப்பு விண்ணப்பம் எழுதிய அனுபவம் கட்டாயம் இருக்கும்.ஏனேன்றால் அது ஒரு சுவையான அனுபவம்.அதிலும் சிலர் விடுப்பு விண்ணப்பம் எழுத தெரியாமல் நன்றாக படிக்கும் மாணவர்களிடம் உதவி என்ற பெயரில் தாஜா செய்து விடுப்பு விண்ணப்பம் எழுதி வாங்குவதும் உண்டு.உண்மையில் விடுப்பு விண்ணப்பம் எழுதுவது அவ்வளவு சிரமமா என்றால் அதுதான் இல்லை.உண்மையில் இது மிகவும் எளிதான ஒன்று தான். இந்த பதிவில் விடுப்பு விண்ணப்பம் எப்படி எழுதுவது என்பதை ஒவ்வொரு படியாக பார்க்கலாம்.பின்பு உதாரணத்திற்காக ஒரு விடுப்பு விண்ணப்பத்தையும் இதனுடன் எழுதுவோம்.
School Leave Letter Format In Tamil:
விடுப்பு விண்ணப்பம் என்றாலே முக்கியமாக இருக்க வேண்டியவை
- அனுப்புநர்
- பெறுநர்
- மதிப்பிற்குரிய ஐயா/அம்மா
- பொருள்
- உள்ளடக்கம்
- இப்படிக்கு உண்மையுள்ள
- நாள்
- கிழமை
Example For Leave Letter:
விடுப்பு விண்ணப்பம்
அனுப்புநர்:
. மாணவனின் பெயர்,
. படிக்கும் வகுப்பு,
பள்ளியின் பெயர்,
ஊர்.
பெறுநர் :
வகுப்பு ஆசிரியர்/ஆசிரியை அவர்கள்,
படிக்கும் வகுப்பு,
பள்ளியின் பெயர்,
ஊர்.
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,
பொருள்: விடுப்பு வேண்டி விண்ணப்பம்
வணக்கம் ஐயா/அம்மா.நான் ---------------பள்ளியில் -------------வகுப்பில் படித்து வருகிறேன்.எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் பள்ளிக்கு வர இயலவில்லை.எனவே தயவு கூர்ந்து 08-08-2022 முதல் 12-08-2022 ஆகிய நான்கு நாட்களுக்கு விடுப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு உண்மையுள்ள
மாணவன்/மாணவி
நாள்:
தேதி:
இடம்:
விடுப்பு விண்ணப்பத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:
- அனுப்புநர், பெறுநர் முகவரியை மேலே குறிப்பிட்டுள்ளது போல ஒரே நேர்க்கோட்டில் எழுத வேண்டும்
- அனுப்புநர், பெறுநர் முகவரி எழுதும் போது அதன் இறுதியில் கமா குறி போட வேண்டும்.அதன் இறுதியில் அதாவது ஊர் என்று முடியும் போது தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- சொல்ல நினைப்பதை தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுதி விடவேண்டும்.
கோவிலுக்கு செல்ல வேண்டி விடுப்பு விண்ணப்பம்
இது மிகவும் எளிதான ஒன்று தான், மேலே எழுதிய கடிதத்தை அப்படியே எழுதி அதில் "எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்பதை, குடும்பத்துடன் ----------கோவிலுக்கு செல்லவிருப்பதால் ---------- முதல் ----------ஆகிய நான்கு/இரண்டு/மூன்று நாள் வரை விடுப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்"என்று எழுத வேண்டும் அவ்வளவுதான்.