ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

ஆயுதபூஜை கவிதைகள்;

இந்த(2022) வருடம் ஆயுதபூஜை அக்டோபர் 4 ம் நாள் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு வருடமும் ஆயுதபூஜை உழைக்கும் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆயூதபூஜையின் சிறப்பம்சம் என்பது செய்யும் தொழிலே தெய்வம் என மதித்து

வணங்கும் மக்கள்,அந்த தொழிலுக்கு உறுதுணையாக உள்ள ஆயுதங்களை பூஜிக்கும் நிகழ்வே ஆயுதபூஜை ஆகும்.


Motivational Quotes in Tamil


Ayuthapoojai valzhthu kavithaigal


ஆயுதபூஜை விழா எதனால் கொண்டாடப்படுகிறது என்பது இன்றளவும் பலருக்கும் தெரிவதில்லை.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்கள் மனைவி பாஞ்சாலியுடன் சூதாட்டத்தில்

தோல்வியுற்று கௌரவரின் ஆணைக்கிணங்க 12 வருடங்கள் வனவாசமும் 1 வருடம் அஞ்ஞான வாசத்தையும் ஏற்று கொண்டனர்.


பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசத்தை முடித்து இறுதியில் பாண்டவர்கள் தங்களை யாருக்கும் அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றிக்கொண்டு மீதமுள்ள ஒரு வருட அஞ்ஞான வாசத்தை கழிக்க முடிவு செய்தனர்.பின்னர் அஞ்ஞான வாசத்தை மேற்கொள்ளும் முன் ஒரு வன்னி மரத்தில் உள்ள பொந்தில் தங்களுடைய ஆயுதங்களை ஒளித்து வைத்தனர். 


அந்யான வாசம் முடிந்த பின் தங்களுடைய ஆயுதங்களை மரத்தின் பொந்தில் இருந்து எடுத்து அதற்கு பூஜை செய்து வழிபாடு செய்து மீண்டும் போருக்கு சென்றனர்.



Vijayadashami wishes in Tamil


ஆயுத பூஜை நல்வாழ்த்து கவிதைகள்


பாண்டவர்கள் தங்களுடைய ஆயுதங்களை பூஜித்த நாளே 

ஆயுதபூஜையாக கொண்டாடப்படுகிறது.


ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் கவிதைகள்;

என் இதயம்

நிறைந்த 

இனியவர்களுக்கும்

உள்ளம் நிறைந்த

உறவுகளுக்கும்

ஆயுத பூஜை

வாழ்த்துக்கள்


நான் நேசிக்கும்

உறவுகளுக்கும்

என்னை நேசிக்கும்

உறவுகளுக்கும்

ஆயுத பூஜை

நல்வாழ்த்துக்கள்


ஆயுதமில்லா

இறைவனும் இல்லை

ஆயுதமில்லா தலைவனும்

இல்லை; இவ்வையகத்தே,

அத்தகைய பெருமை

வாய்ந்த ஆயுதங்களை

மதித்து போற்றுவோம்




உன்னை உயர்த்தும்

ஒவ்வொன்றும் ஒரு

ஆயுதமே




கம்ப்யூட்டரும் களக்கட்டும்

(களையெடுக்கும் கருவி)

சம உரிமை பெரும்

நன்னாள் இந்த ஆயுத பூஜை




ஆயுதங்களுக்கான

அங்கிகார திருவிழா

ஆயுத பூஜை பெரு விழா


எல்லாம் வல்ல

சிவனின் திருவருளால்

இந்த ஆயூத பூஜை

அனைவருக்கும் நன்மையை

வாரி வழங்கட்டும்


பொறிக்கும் 

பொட்டு கடலைக்கும்

வேலை வந்துடுச்சி...

அவிச்ச சுண்டல

அள்ளித் தரும்

நாளும் வந்துடுச்சி


உழைப்பு மட்டுமே

நம்மை உயர்த்தும்

என்று நம்பிக்கையுடன்

வாழ்ந்து கொண்டிருக்கும்

அனைவருக்கும் ஆயுத பூஜை

வாழ்த்துக்கள்


கடின உழைப்பே

கடவுள் என்று

எண்ணி உழைத்து

கொண்டிருக்கும்

ஒவ்வொருவருக்கும்

ஆயுத பூஜை

வாழ்த்துக்கள்


என்றோ ஒரு நாள்

வாழ்க்கையில் முன்னேறி

விடுவோம் என்ற

நம்பிக்கையில் உழைப்பை

விதைத்து கொண்டிருக்கும்

ஒவ்வொருவருக்கும் ஆயுத

பூஜை வாழ்த்துக்கள்


உழுது விதைத்து

ஊருக்கு சோறுபோடும்

விவசாயிகளின் உழைப்பை

மதிப்போம் ஆயுத பூஜை

வாழ்த்துக்கள்


இறைவன் அருளால்

இந்த ஆயுத பூஜை

நன்னாளில் அனைத்து

நன்மைகளையும் பெற்று

நீடு வாழ்க...


எண்ணியவை நல்லாதாக

இருந்தால் ஏற்றம் காணும்

எல்லோர் வாழ்வும்; ஆயுத 

பூஜை வாழ்த்துக்கள்


ஆயுதமில்லாமல்

எந்த தொழிலும்

ஆக்கப்படுவது 

இல்லை


ஆயுத மில்லாமல் 

ஆண்டவனும்

இந்த அகிலத்தில் 

அவதரிக்கவில்லை


அன்பிற்கும் பண்பிற்கும்

என் பாசத்திற்கும் உரிய

உற்றார் உறவினர் 

அனைவருக்கும் ஆயுத பூஜை

நல்வாழ்த்துக்கள்


பண்பிலோங்கிய

பாட்டாளி கூட்டத்திற்கு

ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்


அன்பிலோங்கிய

அன்னைத் தமிழ்

சொந்தங்களுக்கு

ஆயூத பூஜை

நல்வாழ்த்துக்கள்


உழைக்கும்

உள்ளங்களுக்கும்

உழைப்போரை

ஊக்குவிக்கும்

உள்ளங்களுக்கும்

ஆயுத பூஜை

நல்வாழ்த்துக்கள்


உழைக்கும் மக்களுக்கு

உறுதுணையாகவும்

உற்ற துணையாகவும்

இருக்கும் ஆயுதங்களை

பூஜித்து போற்றுவோம்


செய்யும் தொழிலே

தெய்வமென வணங்கி

வாழும் மக்களின்

மனதிற்கு மதிப்பளிப்போம்

இனிய ஆயுத பூஜை

நல்வாழ்த்துக்கள்


விவசாயிகள் முதல்

விஞ்சானிகள் வரை

பயன்படுத்தும் அனைத்து

ஆயுதங்களும் 

போற்றுதலுக்குரியவையே...


வினை தீர்க்கும்

என் நேசத்திற்குரிய

விநாயக பெருமானின்

திருவருளால்‌ இந்த

ஆயூத பூஜை ஆக்கத்தையும்

ஊக்கத்தையும் அனைவருக்கும்

கொடுக்கட்டும்


ஆயுதம் என்னும்

அடிப்படையில்

செருப்புத் தைக்கும்

தொழிலாளி வைத்திருக்கும்

ஊசியோ கார்ப்பரேட்

முதலாளி வைத்திருக்கும்

ஏசியோ எல்லாம் ஒன்றே

இனிய ஆயுதபூஜை

நல்வாழ்த்துக்கள்


இறைவன் படைப்பில்

ஏற்றத்தாழ்வு என

ஏதுமில்லை,அதுபோல்

ஆயுதங்களின் மதிப்பிலும்

உயர்ந்தது தாழ்ந்தது

என ஏதுமில்லை


வாழ்வினில்

உனக்கு ஆக்கத்தையும்

ஊக்கத்தையும்

உயர்ச்சியையும்

தரும் அனைத்துமே

ஆயுதமே;அது உலியாக

இருந்தாலும் சரி,

ஒரு உத்தியாக 

இருந்தாலும் சரி


செய்யும் தொழிலயும்

தொழிலுக்கு உதவும்

கருவிகளையும் மதிக்க

தெரிந்த ஒருவனையே

வாழ்க்கை முன்னேற்றும்


கல்யாலணப் பந்தலுக்கு

அப்புறம் வாழைமரம்

கட்டுர விஷேசம் னா

அது ஆயுத பூஜை தான்


தமிழ்கடவுள், திருப்பரங்குன்ற

திருமகன், கோவிந்தனின்

மருமகன், முருகனின்

திருவருளால் இந்த

ஆயுத பூஜை நன்னாளில்

நீங்கள் நினைத்தவை

நடந்தேர வாழ்த்துக்கள்


சர்வ வல்லமை பெற்ற

சர்வேஷ்வரி அன்னை சக்தியின்

அருளால் ஆயுத பூஜை

நன்னாளில் தீமைகள்

விலகி எல்லா நன்மைகளும்

பெற்று வாழ்வாங்கு வாழ

வாழ்த்துக்கள்


நேச நெஞ்சங்களுக்கும்

பாச பந்தங்களுக்கும்

நம்மிக்கை கொண்ட

நட்புகளுக்கும் இனிய 

ஆயுத பூஜை வாழ்த்துக்கள்


பூசணிக்காய்க்கு வேலை

வந்துடுச்சி, ஆயுத பூஜை

வாழ்த்துக்கள்


பொட்டிட்டு பூ சூடி

சக்தியின் திருவுருவமாய்

நினைத்து வணங்கி

நின்றால் வந்த 

நிபந்தனைகள் நில்லாமல்

செல்லும்


ஒரு தொழிலை 

மேற்கொள்ள உதவும்

பொருட்களையே ஆயுதம்

என்போம்,தொழிலில்

தாழ்வு உயர்வு இல்லை

அதுபோல் ஆயுதங்களிலும்

தாழ்வு உயர்வு இல்லை.


இருப்பவனுக்கு ஏதோ

ஒன்று தான் ஆயுதம்

இல்லாதவனுக்கு

எல்லாமே ஆயுதம்


பாரதி சொன்ன

வழியில் இனியாவது

ஆயுதம் செய்வோமா

நல்ல காகிதந்தனை

செய்வோமா


தரணியாண்ட

தமிழ்க்குடிக்கு

ஆயுத பூஜை

வாழ்த்துக்கள்


செய்யும் தொழிலால்

செல்வம் நிறைந்து

சோகங்கள் விலகி

சொந்தங்கள் பெருகிட

ஆயுத பூஜை

வாழ்த்துக்கள்


ஒன்றாய் இணைந்து

மன நிறைவோடு

மகிழ்ச்சியாய்

கொண்டாடி மகிழுங்கள்

ஆயுத பூஜையை


உங்கள் வாழ்க்கையை

வளமாக்கும் ஆயுதங்களை

மதித்து போற்றும்

நன்னாளாக இந்நாள்

அமையட்டும்,ஆயுத பூஜை

நல்வாழ்த்துக்கள்


உங்களையும்

உங்கள் தொழிலையும்

உயர்த்தும் ஆயுதங்களை

நினைத்து போற்றுவோம்


எதற்காகவோ

எங்கோ பிரிந்து 

கிடக்கும் என் 

சொந்தங்களுக்கு

ஆயுத பூஜை

வாழ்த்துக்கள்


ஒவ்வொரு

பண்டிகையும்

சொல்லிச் செல்வது

இதையே கூட்டாமாக

வாழ்ந்தால் தான்

கொண்டாட்டம்;தனியாக

இருந்தால் திண்டாட்டம்

என்று


கூட்டமாக

கொண்டாடுவது 

தான் பண்டிகைகள்;

பண்டிகைகள் என்பதே

மக்களையும் மனங்களையும்

கூட்டாக்குவதற்காக தான்


பொறியும் சுண்டலும்

புகழ் பெறுவது

இந்த ஆயுத பூஜை

நன்னாளில் தான்


டீ கடையில் குடுக்குற

பொறிக்கும் சுரண்டலுக்கும்

காத்து கிடந்த காலங்கள்

கண்முன் வந்து போகுது


அப்பாவோட பைக் அ

தொடச்சி பொட்டு வச்சி

வாழை மரம் கட்டுன

நியாபகங்கள் நிழலாடுது


ஆயுத பூஜை அன்னைக்கி

வண்டிக்கு அலங்காரம்

பண்ணி சாமி கும்பிட்டு

கடைசியா அந்த 

பூசணிக்காய் உடைக்க

அப்பா கூட ரோட்டுக்கு

போறப்ப இருந்த சந்தோஷம் 

இப்பவும் நியாபகத்துல

இருக்கு


படையல் ல வச்ச

பொறியையும்

சுண்டலையும் ஒன்னா

உக்காந்து டீவி பார்த்துக்

கிட்டே சாப்பிட்ட

நியாபகங்கள் இன்னும்

இருக்கு


அனைவருக்கும்

ஆயுத பூஜை

நல்வாழ்த்துக்கள் னு

வகுப்பறை 

கரும்பலகையில்

கலர் சாக்பீஸால்

எழுதிய நியாபகங்கள்

நிழலாடுது


ஆயுத பூஜைக்கு

அரசு விடுமுறை னு

காலாண்டரில் பார்த்து

பார்த்து சந்தோஷப்பட்ட

பள்ளி நியாபகங்கள்

இன்னும் இருக்கு


எவ்வளவு பெரிய

ஆளாக வளர்ந்தாலும்

ஆயுத பூஜை அன்னைக்கு

அப்பா கூட பைக் கழுவுற

சந்தோஷமே தனி தான்


ஆயுத பூஜை னா

நியாபகம் வரது

பொறியும் சுண்டலும்

தான்


இறைவன் அருளால்

அனைவரும் இன்புற்றிருக்க

ஆயுத பூஜை நன்னாளில்

வேண்டுவோம்


காலம் கடந்தாலும்

மாறாதது பண்டிகைகள்

மட்டுமே;


தூரத்தால் பிரிந்திருக்கும்

என் சொந்தங்கள்

அனைவருக்கும் ஆயுத பூஜை

நல்வாழ்த்துக்கள்


விஜயதசமி வாழ்த்து கவிதைகள்;


விஜயதசமி விழா இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களில் ஒன்றாகும்.விஜயதசமி நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாக அனைவராலும் அறியப்படுகிறது.தமிழகத்தில் பள்ளி ஒரு வயது குழந்தை மற்றும் முதன் முதலில் பள்ளி செல்லும் குழந்தை ஆகியோரின் விரல்களை பிடித்து கொட்டி பரப்பி வைத்த நெல் மணிகளின் மேலோ அல்லது ஆத்து மணலின் மேலோ முதன் முதலில் அகரம் அதாவது "அ" எழுதி பழக்குவார்கள்.



விஜயதசமியை வெற்றித் திருவிழாவாக கொண்டாடுவதற்கான காரணம் என்பது வட மாநிலங்களில் ஒன்றாகவும்‌ தென் மாநிலங்களில் ஒன்றாகும் உள்ளது.



வடமாநிலங்களில் கோவிந்தனின் திரு அவதாரமான ராமபிரான் பத்து தலை கொண்ட ராவணனை அழித்த நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறார்.அதாவது தீமைகள் அழிந்து நன்மைகள் வளர்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.



தென்மாநிலங்களில் பிரம்ம தேவனிடம் கடவுள்,மனிதன்,தேவர் என யாராலும் அழிக்க முடியாத வரத்தை பெற்ற மகிஷாசுரனை தேவி சக்தி ஒன்பது நாள் நவராத்திரி விரதம் இருந்து பத்தாம் நாளில் மகிஷாசுரனை அழித்து இந்த அகிலத்தை காத்து நின்றாள்.அத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரியின் பத்தாம் நாளையே விஜயதசமி விழாவாக கொண்டாடுகிறோம்.

எதுவாக இருந்தாலும் பொதுவாக பார்த்தால் தீமைகள் அழிந்து நன்மைகள் நிலைப்பெற்றதையும் தீமைகளை அழித்து வெற்றி பெற்ற நாளையுமே விஜயதசமி நாளாக கொண்டாடுகிறோம்

விஜயதசமி வாழ்த்து கவிதைகள்;


வெற்றிக்கு வித்திடும்

வெள்ளி நாளாக

விஜயதசமி நன்னாள்

அனைவருக்கும் அமையட்டும்



நவராத்திரி நாயகி

நமையாளும் தேவி

பார்வதியின் அருளால்

நினைத்த காரியங்கள்

இனிதே நிறைவேறட்டும்



விஜயதசமி நன்னாளில்

தொட்ட காரியங்கள்

துலங்கி,துவண்ட

உள்ளங்கள் எதையும்

துணிவுடன் எதிர்கொள்ள

வாழ்த்துக்கள்



தோல்வி உங்களை

எவ்வளவு தூரம்

துரத்துகிறதோ

அந்த அளவிற்கு நீங்கள்

வெற்றியை துரத்துங்கள்...

பிடிக்கும் வரை பிடிப்பை

விட்டுவிடாதீர்கள், விஜயதசமி

நல்வாழ்த்துக்கள்




கல்வி,செல்வம்

வீரம் என மூன்றிலும்

முன்னேறி வாழ்க்கையின்

முழுமை பெற இந்த

விஜயதசமி நன்னாளில்

இறைவனை வேண்டுவோம்



உன் முயற்சிகள்

முன்னேற்றம் கண்டு

தோல்வி படிகள்

வெற்றி எனும்

வாசலை அடைய 

விஜயதசமி நன்னாளில்

இறைவனை வேண்டுவோம்



உன் முயற்சிக்கு முரணாக

உள்ள முட்டுக்கட்டைகள்

அனைத்தும் முடிவுக்கு

வரும் நன்னாளாக

இந்நாள் அமையட்டும்



உன் வலிகள்

அனைத்திற்கும்

வழி பிறக்கும் 

நன்னாளாக இந்த

விஜயதசமி அமையட்டும்



நவராத்தியியின்

தவபலனை விஜயதசமியில் தாட்சாயிணை

பெற்றது போல்

தாட்சாயிணி அருளை

விஜயதசமியில் பெற்று

பல வெற்றிகள் பெற

வாழ்த்துக்கள்




ஈசனின் பாதி

தேவி பார்வதி

அருளால் உள்ளம்

நிறைந்து இல்லம்

இனிக்க விஜயதசமி

வாழ்த்துக்கள்




ஒன்பது நாட்கள்

நவராத்திரியை

கொழு வைத்து 

கொண்டாடி பத்தாம்

நாள் வெற்றிவிழாவை

விஜயதசமியாக கொண்டாடி

மகிழ வாழ்த்துக்கள்



உன்னை தவிர

உன் வெற்றிக்கு

எதுவும் தடையில்லை

என்பதை உணர்ந்து

உழைத்து முன்னேறுங்கள்

விஜயதசமி வாழ்த்துக்கள்



கடின உழைப்பும்

கட்டுக்கோப்பான

வாழ்க்கையும்

வெற்றிக்கான ரகசியங்கள்

விஜயதசமி வாழ்த்துக்கள்



முப்பெரும் தேவிகளின்

அருளால் முடிவுக்கு

வரட்டும் உன் துன்பங்கள்

யாவும், விஜயதசமி

வாழ்த்துக்கள்



எமையாளும்

உமையவளின்

உள்ளம் குளிர்ந்து

நம் இல்லம் செழிக்க

விஜயதசமி வாழ்த்துக்கள்



காத்திருக்கிறது

காலம் உன்

வெற்றி காலடிக்காக

விஜயதசமி வாழ்த்துக்கள



நல்ல உள்ளங்களுக்கு

இல்லம் செழிக்க

விஜயதசமி வாழ்த்துக்கள்



இறைவன் திருவருளால்

எண்ணியவை ஈடேறி

வாழ்க்கையில் இன்னும்

முன்னேறி,முயற்சிகள்

அனைத்திலும் வெற்றி

பெற்று வாழ விஜயதசமி

வாழ்த்துக்கள்



நெல்லை பரப்பி

தமிழ் சொல்லை 

எழுதும் குழந்தைகள்

எண்கள் போல்

முடிவில்லா வெற்றி

பெற வாழ்த்துக்கள்



நெல்லில் அ எனும்

சொல்லெழுதி

தமிழை வளர்க்கும்

தங்கங்களுக்கு

இனிய விஜயதசமி

வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top