தீபாவளி நல்வாழ்த்து கவிதைகள் - Diwali wishes in Tamil

Vizhimaa
0

தீபாவளி நல்வாழ்த்து கவிதைகள்:

தீபாவளிக்கு சொல்லப்படும் காரணங்களில் ஒன்று தான் தேவி பார்வதி நரகாசுரனை அழித்த நாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம் என்பது மற்றொரு காரணமும் கூறப்படுகிறது, வால்மீகி இயற்றிய‌ வடமொழி ராமாயணத்தில் ராமர் ராவணனை அழித்து,14 வருட வனவாசத்தையும் முடித்து மீண்டும் அயோத்தி திரும்பிய நாளை தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்பதும்...

தல தீபாவளி நல்வாழ்த்துக்கள்ப ப 

கார்த்திகை தீப வாழ்த்து கவிதைகள் படிக்க

Diwali wishes quotes in Tamil

காரணங்கள் எதுவாக இருந்தாலும் இந்த தீபாவளி பண்டிகை எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியை சேர்க்கும் பண்டிகையாக உள்ளது.

தீபாவளி என்றாலே மக்கள் மனதில் உற்சாகம்‌‌ பொங்கி வழிகிறது.இந்த நல்ல நாளில் அனைவருக்கும் வாழ்த்து சொல்வதற்காக தீபாவளி வாழ்த்து கவிதைகளையும் தீபாவளி பற்றிய கவிதைகளையும் இங்கு பதிவிடப்படுகிறது.

தீபாவளி வாழ்த்து கவிதைகள்;

இந்த தீபாவளி

பண்டிகையில்

வெடியோடு சேர்ந்து

துன்பங்களும் வெடித்து

சிதற இனிய தீபாவளி

நல்வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்து கவிதைகள்

Diwali wishes quotes in Tamil

அளவோடு வெடி வெடித்து

அளவில்லாமல் அன்பை பகிர்ந்து

இனிப்புகள் போல் இல்லமும்

உள்ளமைம் தித்தித்து

இனிதே கொண்டாடி

மகிழுங்கள் இந்த

இனிய தீபாவளியைகந்தக பூமி

தந்த பட்டாசு

பரிசுகளை வெடித்து

மகிழ்ந்து இனிதே

இன்புற்று கொண்டாடி

மகிழுங்கள் தீபாவளியைஇனிப்புகளோடு இனிதாய்

வெடிகளோடு வேடிக்கையாய்

உறவுகளோடு ஒன்றாய்

கொண்டாடுங்கள் இந்த

தீபாவளியை...குடும்பங்களோடு

கோலாகலமாய்

சொந்தங்களோடு

வண்ணமயமாய்

பட்டாசுகளோடு 

ஒலிமயமாய்

தீபங்களோடு

ஒளிமயமாய்

கொண்டாடுங்கள்

இந்த இனிய

தீபாவளியைநல்லது நினைத்து

நல்லது செய்யும்

அனைத்து உற்றார்

உறவினர்களுக்கும்

இனிய தீபாவளி

நல்வாழ்த்துக்கள்


Diwali wishes quotes in Tamil

பொட்டு வெடியில

இருந்து கட்டுவெடி

வரைக்கும

சாட்டையில இருந்து

சங்கு சக்கரம் வரைக்கும்

வெடித்து மகிழ்பவர்க்கும்

வேடிக்கை பார்ப்பவர்க்கும்

இனிய தீபாவளி

நல்வாழ்த்துக்கள்8 வயதில் தீபாவளி

என்றால் புத்தாடை

நியாபகம் வரும்

12 வயதில் தீபாவளி

என்றால் அம்மா 

செய்யும் பலகாரங்கள்

நியாபகம் வரும்

15 வயதில் தீபாவளி

என்றால் பட்டாசுகள்

நியாபகம் வரும்

18 வயதிற்கு மேல்

தீபாவளி என்றாலே

புதுப்படங்கள் தான்

நியாபகம்‌ வரும்

வயதிற்கு ஏற்றாற்

போல் கொண்டாட்டங்களும்

மாறுகின்றன.இனிய 

தீபாவளி நல்வாழ்த்துக்கள்அம்மா செய்யும்

தீபாவளி பலகாரத்தின்

மேல் தீராத காதல்

இப்பொழுதும் உள்ளது.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்ஏழையின் வீட்டிலும்

எல்லா வசதிகளும்

உள்ள வீட்டிலும்

ஏற்றும் விளக்குளிலிருந்து

பெறும் ஒளி ஒன்று தான்

இனிய தீபாவளி

நல்வாழ்த்துக்கள்


Diwali wishes quotes in Tamil

பட்டாசு வெடித்து

பலகாரம் தின்று

புத்தாடை உடுத்தி

மத்தாப்பு போல்

மகிழ்ச்சியாய் 

கொண்டாடுங்கள்,

இனிய தீபாவளி

நல்வாழ்த்துக்கள்உள்ளம் மகிழ்ந்து

இல்லம் நிறைந்து

இனியவர் அனைவரும்

இன்புற்றிருக்க இனிய

தீபாவளி நல்வாழ்த்துக்கள்தீபாவளி அன்னைக்கு

காலைல டெய்லர்

கடைக்கு போய்

தச்சு வச்ச புதுத்துணிய

வாங்கிட்டு வந்து

போடுறப்போ இருக்குற

சந்தோஷமே தனி-90's kidsதீபாவளி அன்னைக்கு

வெடிவெடிக்கிறத

வேடிக்கை பாக்கிறதே

ஒரு சந்தோஷம் தான்
இல்லாதவர்க்கும்

எல்லாம் கிடைக்க

வேண்டும் என்று

வேண்டி, கொடுத்து 

கொண்டாடுங்கள்

இந்த தீபாவளியை


Diwali wishes quotes in Tamil

நெஞ்சத்தில்

நீங்காமல்

நிலைத்திருக்கும்

தாய் தமிழ்

சொநதங்களுக்கும்

வாழ்க்கையில் 

வாடாமல் பார்த்துக்

கொள்ளும் நண்பர்களுக்கும்

சுற்றத்துக்கும் உற்றத்துக்கும்

உலகத்துக்கும் இனிய

தீபாவளி நல்வாழ்த்துக்கள்வாழ்க்கை எனும்

புதிரில் புரியாத

சந்தோஷங்கள் தான்

இந்த பண்டிகைகள்;இனிய

தீபாவளி நல்வாழ்த்துக்கள்எங்கெங்கோ

பிரிந்த சொந்தங்களை

எல்லோரிடமும் சேர்த்து

மகிழும் தீபாவளியை

கொண்டாடி மகிழ்வோம்தித்திக்கும்

இனிப்புகளோடும்

திக்குமுக்காட வைக்கும்

பட்டாசுகளோடும்

திரும்பி பார்க்க

வைக்கும் 

புத்தாடைகளோடும்

இனிதே இன்புற்று

கொண்டாடுங்கள்

தீபாவளியைமத்தாப்பு போல்

மனம் நிறைந்து

உறவினர்களுடன்

அன்பு பாராட்டி

உள்ளம் மகிழ்ந்து

கொண்டாடுங்கள்

இனிய தீபாவளியைதீபாவளி

அன்று திரைப்படம்

பார்ப்பதே ஒரு த்ரில்

தான்தீபாவளி அன்று

முதல் நாள் முதல்

ஷோ அமையும்

படங்கள் வெற்றி

படங்களேநண்பர்களோடு

வெடி வெடித்து

நகர்ந்த தீபாவளி

நினைவுகள் நீங்காமல்

நினைவுச் சுவடுகளாய்

நெஞ்சில் நிற்கிறதுசாரல் மழையில்

சரவெடி வெடித்த

நியாபகங்கள்

சத்தமிடுகிறது

இதயக்கூட்டில்வெடிக்காத பட்டாசுகளை

சேர்த்து வெடித்த

நியாபகங்கள்

வேடிக்கையாய்

இருக்கிறது நினைத்து

பார்த்தால்பாறைக்கு வெடி

வைப்பது போல்

சானிக்கு வெடி

வைத்து சிதறடித்தது

ஒரு காலம்வெடித்து விடுமோ

என்ற பயத்தில்

பற்றவைக்காத திரியை

பாதியில் விட்டுவிட்டு

ஓடியதும் ஒரு காலம்பட்டாசு பயம் தெளிந்து

ஊசி வெடியை

தூசியாய் நினைத்து

கையில் பற்றவைத்து

பறக்க விட்டதும்

ஒரு காலம்தீபாவளி நினைவுகளை

திண்று செரிக்க

திண்ணையில்

உறங்கியதும் ஒரு

காலம்...தீபாவளி மறுநாள்

பள்ளி செல்ல 

புத்தாடை போட்டு

மகிழ்ந்ததும் ஒரு காலம்தீபாவளி அன்று

தெருவெங்கும்

தோரணங்கள் போல

பட்டாசு கடைகள்

பரவி கிடப்பதை 

வேடிக்கை பார்த்து

கேலி செய்ததும்

ஒரு காலம்தீபாவளி என்றாலே

தனி கவனம் பெறும்

வீட்டின் அழகான

அலங்கரிப்பை

ரசித்து மகிழ்வதும்

இனிப்புகளை ருசித்து

மகிழ்வதுமே தீபாவளி

சிறப்புகள்தீபாவளி அன்று

அம்மா‌ கையால் 

எண்ணெய் தேய்த்து 

குளித்து முடித்து

கோவிலுக்கு சென்று

வீடு விளங்க 

விளக்கு வைத்து

கையோடு அம்மாவின்

கை வண்ணத்தில்

செய்த கரிக்கொழம்பை

ஒரு கட்டு கட்டுவதே

என்னை பொறுத்த வரை

சிறந்த தீபாவளிவைகறையில் எழுந்து

விடியலுக்கு முன்னால்

இருக்கும் வெள்ளி

இருட்டில் மத்தாப்பையும்

புஷ்வானத்தையும்

வெடிப்பது புதையல்

போன்ற மகிழ்ச்சியை

தரும்பொம்மை துப்பாக்கியில்

பொட்டு வெடியை

சுற்றி எல்லோரையும்

போட்டுத் தள்ளிய

நியாபகம் பசுமையாய்

இன்னும் நினைவில்

நிற்கிறது
தீபாவளி அன்று

அம்மா கையால்

அதிரசம் சுட

அடம்பிடித்து

சுட்டுத் தந்த

அதிரசத்தை நண்பர்களுடன்

பகிர்ந்து கொண்ட

பள்ளி பருவம் நிற்கிறது

நினைவில் பசுமையாய்அடுக்கு பானை

அலங்கரிப்பில்

பதிக்கி வைத்திருக்கும்

தீபாவளி பலகாரங்களை

திருட்டுத் தனமாய்

திண்று ருசித்த

நினைவுகள் 

நீடித்திருக்கிறது

என் நெஞ்சில்பட்டாசு பெட்டியை

பார்த்த ஆர்வத்தில்

பசியெடுக்காமல்

உறங்கிய நியாபகங்கள்

நினைவுகளில் தழும்புகிறதுதீபாவளி அன்று

புதுத்துணி உடுத்தி

இது நல்லாருக்கா

என்று அத்தை,சித்தி

என எல்லோரிடமும்

கேட்டதும் நினைவில்

இருக்கிறது.


தற்போதைய தீபாவளி

கொண்டாட்டம் என்பது

சினிமாக்காரர்களின்

கொண்டாட்டத்தையும்

சீரியல் நடிகைகளின்

கொண்டாட்டத்தையும்

தொலைக்காட்சியில்

பார்த்து சிரிப்பதோடும்

தியேட்டர் போய் புதுப்படம்

பார்ப்பதோடும் மட்டுமே

கழிகிறதுசொந்தங்கள் நிறைந்து

உள்ளங்கள் இணைந்து

கொண்டாடிடவே‌ பண்டிகைகள்

உருவாக்கப்பட்டன;இனிய

தீபாவளி நல்வாழ்த்துக்கள்நேசமிகு உறவுகளுக்கும்

பாசமிகு நட்புகளுக்கும்

முத்தான தீபாவளி

நல்வாழ்த்துக்கள்தெகட்ட தெகட்ட 

இனிப்புகள் தின்று;

பதற பதற 

பட்டாசுகள் வெடித்து

கொண்டாடுங்கள் இந்த

இனிய தீபாவளியைவருடம் ஒருமுறை

சிவகாசிக்கு

சீர் கொடுக்கும்

வழக்கமாய்

பட்டாசு வெடித்து

பண்டிகையை 

கொண்டாடிடுங்கள்காற்று மாசுபாட்டை

கட்டுப்படுத்தும்

கடமை நம் அனைவருக்கும்

உண்டு என்பதை

உணர்ந்து அளவோடு

வெடித்து ஆனந்தம்

கொள்ளுங்கள் இந்த

தீபாவளியில்பட்டாசு வெடிப்பது

போல் மனதில் உள்ள

துக்கங்கள் எல்லாம்

வெடித்து சிதற

இனிய தீபாவளி

நல்வாழ்த்துக்கள்காற்றையும் ஆற்றையும்

காப்பது நம் கடமை

என்பதை உணர்ந்து

அளவோடு வெடித்து

அகிலலம் காப்போம்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


தீபாவளி நல்வாழ்த்து கவிதைகள், தீபாவளி வாழ்த்து கவிதைகள், தீபாவளி நல்வாழ்த்துக்கள், தீபாவளி images, diwali wishes greetings in Tamil 


x

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top