தலதீபாவளி வாழ்த்து கவிதைகள் Thala diwali wishes quotes in Tamil

Vizhimaa
0

தல தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிதைகள்;

வருடாவருடம் வருகின்ற தீபாவளி என்னவோ ஒன்று தான்.நம் தமிழ்நாட்டில் இரண்டு வகையான தீபாவளிகள் கொண்டாடப்படுகின்றன.ஆம்‌ அனைவரும் கொண்டாடும் தீபாவளி ஒன்று, திருமணமான புதிய‌ தம்பதிகளின் வாழ்வில் வரும் முதலாமாண்டு தீபாவளியை இங்கே தல தீபாவளி என்றும் கொண்டாடுகின்றனர்.தலை என்பதன் பொருள்‌ முதல் என்பதாகும்.திருமணமான முதல் வருடம் கொண்டாடுவதால் இதனை தலை தீபாவளி என்றும் தலை என்ற சொல் வழுவி காலப்போக்கில் தல என்றும் அழைக்கப்படுகிறது.

தீபாவளி நல்வாழ்த்து கவிதைகள்


Thala deepavali wishes quotes in Tamil

தல தீபாவளியை தம்பதியர் பெண்ணினுடைய பிறந்த வீட்டில் கொண்டாடுவதே வழக்கமாக உள்ளது.

மேலும் திருமணமான புதுப்பெண்ணிற்கு‌ தீபாவளி சீர் கொடுக்கும் முறையும் வழக்கத்தில் உள்ளது.மாமன்‌ மச்சான்களுடன் மாப்பிள்ளையானவர் இணைந்து எண்ணெய் தேய்த்து கொண்டு, தலைக்கு குளித்து விட்டு புத்தாடை உடுத்தி தீபாவளியை கொண்டாடுவதே இங்கு வழக்கமாக உள்ளது.

இந்த தலை தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதற்கான‌அழகிய கவிதைகள் கீழே இடம்பெற்றுள்ளன.

தல தீபாவளி வாழ்த்து கவிதைகள்;

சீர் கேக்காத

சிறப்பான மருமகனுக்கும்

கேட்காமலே கொடுக்கும்

மாமனார்க்கும்

எவ்வளவு கொடுத்தாலும்

போதவில்லை.. என்று

கூறும் மகளுக்கும்

இனிய தல தீபாவளி

நல்வாழ்த்துக்கள்
இரு நெஞ்சங்கள் ஒன்றாக 

இணைந்த பின் கொண்டாடிடும் 

முதல் தீபாவளி, தித்திக்கட்டும் 

இந்த நாள் இனிப்புகளால்... 

திகழட்டும் இந்த நாள் 

வானவேடிக்கை போல் வண்ணமயமாய்...இனிய 

தல தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

 


இரு மனம் இணைந்த இந்த 

திருமண பந்தத்தின் தலைமுறைகள் தலைத்தோங்க இனிய 

தல தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 


ஒரு ஆண் முதல் முறை 

பிறந்த வீட்டில் இல்லாமால் 

இன்னொரு வீட்டில் கொண்டாடுவதும்....ஒரு 

பெண் முதல் முறையாக 

பிறந்த வீட்டிலேயே விருந்தாளி 

போல் கொண்டாடுவதும் இந்த 

தல தீபாவளியை தான்....இனிய 

தல தீபாவளி வாழ்த்துக்கள்

 


மாமியார் வீட்டில் கொடுத்த‌ 

சீர்களில் உயர்ந்தது என் 

மனைவி தான் என்று 

நினைக்கும் கணவர்களுக்கு 

இனிய தல தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

 


தம்பதிகளாய் கொண்டாடும் 

முதல் தீபாவளியே தல தீபாவளி...

தல தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

 


திருமண பந்தத்தின் முதல் 

திருவிழா இந்த தல தீபாவளியே....மத்தாப்பூ 

போல் மகிழ்ச்சி பொங்கிட 

இனிய தல தீபாவளி 

நல்வாழ்த்துக்கள் 

 


தஞ்சம் கொண்டவருடன் 

நெஞ்சம் மகிழ்ந்து 

கொண்டாடுங்கள்... இந்த தல தீபாவளியை 
மாமியார் கையால்

செய்த கரிக்கொழும்பை

சாப்பிட்டு,சாப்பிட்டு

முடித்த கைக்கு புது

மோதிரம்‌ வாங்கிட்டு

வரும் மாண்புமிகு

மாப்பிள்ளைகளுக்கு

இனிய தல தீபாவளி

நல்வாழ்த்துக்கள்

 புதிய மண வாழ்க்கையில் 

புதிதாய் மலர்ந்த 

உறவுகளுடன் இனிதாய் கொண்டாடுங்கள் இந்த தல தீபாவளியை 

 மாமியார் வீட்டின் மறு 

சீருக்காக இல்லாமல்.., 

மனைவியின் மகிழ்ச்சிக்காக 

மனதார கொண்டாடுங்கள்...தல தீபாவளியை 

 தீப ஒளி போல் ஒளிரட்டும் 

இந்த திருமண பந்தம்...

இனிய தல தீபாவளி 

நல்வாழ்த்துக்கள்
வாழையடி வாழையாய்

உங்கள் இல்லம்

தழைத்தோங்க

இனிய தல தீபாவளி

நல்வாழ்த்துக்கள்
கணவனும் மனைவியுமாய்

காணும் முதல் தீபாவளியே

இந்த தல தீபாவளி
புத்தாடை உடுத்தி

மத்தாப்பு வெடித்து

புதுமன‌ தம்பதிகள்

தங்கள் வாழ்க்கையை

தொடங்குங்கள்
சிதறும் கண்ணாடியாய்

துன்பங்கள் விலகி

மலரும் மத்தாப்பாய்

மனம் நெகிழ்ந்து

கொண்டாடுகிங்கள்

இந்த தலை தீபாவளியை
புது வாழ்க்கையின்

முதல் திருவிழா

தல தீபாவளி

நல்வாழ்த்துக்கள்
இருமனமும்

ஒருமனமாய்

இணைந்து

இனிதே கொண்டாடுங்கள்

இந்த தல தீபாவளியை
மாமியார் வீட்டில்

மகிழ்வுடன்

கொண்டாடுங்கள்

தல தீபாவளியை
புதிதாய் தொடங்கிய

வாழ்வில் உறவுகளை

புரிந்து கொள்ள

ஓர் அழகிய தருணம்

இந்த தலை தீபாவளி
சொந்தங்களோடு சேர்ந்து

சோகங்கள் தீர 

இனிதே கொண்டாடுங்கள்

தல தீபாவளியை
புதிதாய் பூத்த

மலர் போல்

எண்ணங்கள் பூத்து

குலுங்க இனிய தல

தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தல தீபாவளி

கொண்டாடும்

தம்பதியர்களுக்கு

அன்பு வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top