கிறிஸ்துமஸ் வாழ்த்து கவிதைகள் - Merry Christmas wishes quotes in Tamil

Vizhimaa
0

கிறிஸ்துமஸ் வாழ்த்து கவிதைகள்; 

இறை தூதராக அறியப்படும் யேசு கிறிஸ்துவின் பிறப்பையே கிறிஸ்மஸாக கொண்டாடி மகிழ்கிறோம்.கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே கேக், சேண்ட்டா கிளாஸ், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் அந்த மரத்தை அலங்கரிக்கும் வண்ண விளக்குகள் ஆகியவையே அனைவருக்கும் நினைவில் வரும்.உண்மையில் கிறிஸ்துமஸ் என்றால் பலருக்கும் நினைவில் வருவது சாண்டா கிளாஸ் தாத்தா தான்.

குழந்தைகளின் உலகத்தில் சேண்ட்டா கிளாஸ் முக்கிய அங்கம் வகிக்கிறார்.கிறிஸ்துமஸ் தினத்தில் சேண்ட்டா கிளாஸ் வந்து பரிசுகள் தருவார் என்று அனைத்து குழந்தைகளும் எதிர்பார்க்கின்றனர்.

Merry Christmas wishes quotes in Tamil

சேண்ட்டா கிளாஸ் கதாபாத்திரம் உண்மையோ பொய்யோ ஆனால் அது குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக கிறிஸ்துமஸ் நன்னாளில் அமைகிறது.அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய கிறிஸ்துமஸ் திருநாளிற்கு வாழ்த்து கவிதைகள் இங்கு பதிவிடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் வாழ்த்து கவிதைகள்;

மதங்களை தாண்டி

மனிதம் வாழ்வதற்கு

பண்டிகைகளும் ஒரு

காரணம்...இனிய

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்கண்ணீருடன் விதைவிதைக்கும்

ஒரு மனிதன் மகிழ்ச்சியுடன் தான்

அதை அறுவடை செய்வான் என்று

கூறிய கர்த்தரின் பிறந்தநாள் இன்றுதெரியாமல் செய்த

தவறுகள் பாவங்கள்

ஆகாது,தெரிந்து செய்த

பாவங்கள் இங்கே

மன்னிக்கப்படுவதில்லை,

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்இனங்களை தாண்டி

இன்னும் இந்த பூவுலகில்

இனக்கமும் இதயமும்

வாழ்வதற்கு பண்டிகைகள்

ஒன்றே காரணம், கிறிஸ்துமஸ்

நல்வாழ்த்துக்கள்அன்பு கொடுக்கும்

ஒருவர் யாரிடமும்

எதையும் எப்பொழுதும்

எதிர்பார்க்க தேவையில்லை,

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்கிறிஸ்துமஸிற்கு கேக்

வெட்டும் போது நினைவில்

கொள்ளுங்கள், நீங்கள்

வெட்டும் கேக்கை விட

அதை மற்றவர்களுக்கு

கொடுக்க வேண்டும்

என்ற எண்ணத்தையே

கர்த்தர் விரும்புகிறார்எல்லோரும் எல்லாவற்றையும்

பெற்று இன்புற்று

வாழ வேண்டும் என்பதே

இறைதூதரான யேசு

கிறிஸ்துவின் விருப்பம்கிட்டுவது அனைத்தும்

கிறிஸ்துவின் கிருபையே...எண்ணியவை அனைத்தும்

எண்ணம்போல் நடந்தேற

கர்த்தரின் கருணை

கடலென கிடைக்கட்டும்

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்ஏழைகளின் வாழ்க்கை

ஏற்றம் காண ஏசு

கிறிஸ்துவின் பூரண

நல்லாசி கிடைக்கட்டும்கல்வாரி மலையின்

கதாநாயகனின் பிறந்த நாள்

இன்று...இறைதூதரான யேசு

கிறிஸ்துவின் இனிய

பிறந்தநாள் இன்றுதேவாலய திருவிழா

கிறிஸ்துவின் பெருவிழா

கிறிஸ்துமஸ் என்பது

மறை விழாவாழ்க்கையில் வளமும்

நலமும் கூடி வர

இந்த நாள் இனிய

நாளாக அமையட்டும்மனிதர்களின்

பாவங்கள் அனைத்தையும்

சிலுவைகளாக சுமந்த

பரம்பொருளின் பிறந்தநாள்

இன்று...அன்பு ஒன்றே

அகிலத்தோர்க்கு

ஆதரவு என்று 

உணர்த்திய ஆண்டவனின்

பிறந்த நாள் இன்றுகிறிஸ்துமஸ் விழாவில்

கீழோர் மேலோர்

பாராமல் அனைவரும்

ஒன்றென எண்ணி

ஒருமனதாய் கொண்டாடி

மகிழுங்கள்நீ விழும்போதெல்லாம்

கர்த்தர் உன்னுடனே

இருக்கிறார்...இரக்கம் கொள்ளுங்கள்

இல்லாதவரிடத்தில்...

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
பூவுலகின் பாவங்களை

பரிசுத்தமாக்க பிறந்தவரின்

பிறந்த நாள் இன்று
பிறந்து சிறந்தவர்களில்

முதலும் முழுமையுமானவரின்

பிறந்த நாள் இன்று
கஷ்டப்படும் ஆத்மாக்களுக்கு

கர்த்தரின் கருணை

கடலென கிடைக்கட்டும்
இறைவனின் நீதிமன்றத்தில்

அனைவரும் சமமே
மனிதருக்காக

மரணத்தை வரமாய்

கருதிய மானிட 

ஜோதியின் பிறந்த 

நாள் இன்று
இறைவனின் தூதனோ

இறைவனோ தெரியவில்லை

இன்புற்றிருக்க இவரின்

துணை இனறியமையாதது

ஆகிறது... கிறிஸ்துமஸ்

நல்வாழ்த்துக்கள்
இந்த நாள்

யேசுவின் கிருபையால்

எல்லா நன்மைகளையும்

உங்களுக்கு வழங்கட்டும்
பாவங்களை

பரிசுத்தமாக்கிக்

கொள்ள கர்த்தரின்

காலடியை நாடுங்கள்
எல்லாம் வல்ல

யேசுவின் கிருபையால்

இந்த நாள் இனிய

நாளாக அமையட்டும்
உங்கள் உதடுகள்

புன்னகை பூத்து

பூமியை அலங்கரிக்கட்டும்
மனிதனாய் பிறந்து

மனிதத்தை உயர்த்திய

இறையின் இனிய

பிறந்த நாள் இன்று
தொழுவத்தில் பிறந்து

பிறரை தொழச் செய்த

அன்பரின் பிறந்த நாள்

இன்று
மானிட மறைக்கு

மகத்தான இனிய

நாள் இன்று
கருணைக் கடலான

கர்த்தரின் பிறந்தநாள்

இன்று
மண்ணில் தோன்றிய

மனிதரின் மகத்துவம்

உணர்த்திய மகானின்

பிறந்த நாள் இன்று
இறையின் தூதனான

இனியவனின் பிறந்த

நாள் இன்று
உங்களின் இன்னல்கள்

நீங்கி இன்பங்கள்

இனித்திட இந்த நாள்

இனிதே தொடங்கட்டும்
மன்னிப்பு என்ற

வார்த்தையில்

பலரை வாழ வைத்த

கர்த்தரின் பிறந்தநாள்

இன்று
உலகை உன்னதமாக்கிய

உயரியவன்‌ உயிர்ப்பித்த

உன்னத நாள் இன்று
மானிட மறையின்

ஆதியை சொன்ன

ஆதவனின் பிறந்த நாள்

இன்று
கண்மூடித்தனமான

கர்த்தரின் கருணையால்

உங்கள் கவலைகள்

நீங்கட்டும் இந்த நன்னாளில்
இன்பமும் துன்பமும்

கலந்தது தான்

இந்த கலியுகம்,

கிறிஸ்துவின் ஆசி

உங்களுக்கு பரிபூரணமாய்

கிடைக்கட்டும்
ஏழைகளின்

ஆதவன் உதித்த

இந்த நன்னாளில்

ஏழ்மை ஒழிய 

பாடுபடுவோம்
இதயத்தின்

ரணங்களை தன்

கரம் கொண்டு

இதமாக்குபவரின்

இனிய பிறந்தநாள்

இன்று
வசதியோ வறுமையோ

நம்மை வாழ வைப்பது

நம் எண்ணங்களே...
இறை தூதரின்

இதயத்தில்

எல்லோருக்கும்

இடமுண்டு
நல்ல எண்ணங்களை 

விதைத்து நல்லவற்றை

நாடுங்கள் இந்த

நன்னாளில்
சிலுவைகள் சுமந்தவரை

நாம் நம் நெஞ்சினில்

சுமப்போம்
மற்றவருக்காக

மரணிப்பததை மாண்பாக

கொண்டவரை மனதார

கொண்டாடுவோம்
இறையின் அருளால்

அனைவரும் 

இன்புற்றிருப்போம்...
மனிதர்களை மனிதர்கள்

நேசிக்கவே எம் மன்னவர்

உதித்தார்
காற்றில் கலந்திருக்கும்

கர்த்தரின் நாமம்
மனிதம் வாழ

மரணித்த மகானின்

பிறந்த நாள் இன்று
உன்னை உயர்த்த

உன் எண்ணத்தை 

முதலில் உயர்த்திக்

கொள்; கிறிஸ்துமஸ்

நல்வாழ்த்துக்கள்
வெட்டும் கேக்கை

வறுமையில் வாடும்

ஏழைக்கு தானமாக்குங்கள்
எல்லோரிடமும் அன்பு

காட்டுங்கள்;இதுவே

இறைவனின் கோரிக்கை
தோன்றும் போது

புகழோடு தோன்றியவர்

மறைந்தும் புகழோடு

வாழ்பவர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top