மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி

Vizhimaa
0

How to Link Adhar Number With EB service Number in Tamil:

தமிழகம் முழுவதும் ஆதார் எண்ணை மின்னிணைப்பு என்னுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் அவசர அவசரமாக மக்கள் அரசு மின் விநியோக அலுவலகத்திற்கும் சிஎஸ்சி சென்டர்களுக்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வெகு சுலபமாக வீட்டில் இருந்தபடியே தங்களுடைய ஆன்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தி ஈபி நம்பர் உடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி ?

உள்ளங்கையில் உலகமே வந்து விட்ட நிலையில் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போனால் முடியாதது என்பது எதுவும் இல்லை என்ற நிலையே இருக்கிறது. உங்களுடைய மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போதுமானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் கூகுள் அல்லது வேறு ஏதாவது வலைதள தேடல் செயலியை திறந்து கொள்ளுங்கள்.

வீட்டில் இருந்தபடியே‌ மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?


கூகுள் தளத்தில் சென்று தமிழ்நாடு மின்வாரியத்தின் அலுவல் இணையதளமான அதாவது வலைதளமான TANGEDCO என்று தேடுங்கள் முதல் இடத்திலேயே தமிழக அரசின் அலுவலக வலைத்தளம் இடம்பெறும் அதற்குள் சென்று Consumer Info என்ற தகுதியை தொடுங்கள் தொட்டவுடன் அதன் கீழ் ஒரு பத்திலிருந்து பதினைந்து சேவைகள் வரிசையாக குறிப்பிடப்பட்டிருக்கும் அதில் முதல் இடத்திலேயே link Aadhar to your EB service number என்ற வாக்கியம் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

How to link Aadhar number with eb service numberஅதன் பிறகு உங்களுடைய இபி சர்வீஸ் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.நீங்கள் பதிவு செய்த ஈபி சர்வீஸ் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை அந்த வலைதளம் உங்களுக்கு காட்டும் உங்களிடம் அந்த மொபைல் எண் இருந்தால் அதே எண்ணிற்கு நீங்கள் ஓடிபி அனுப்பி கொள்ளலாம் அந்த நம்பர் தற்போது உங்களிடம் இல்லை என்றால் உங்களிடம் இப்போது கையில் இருக்கும் மொபைல் எண்ணை அதில் பதிவு செய்து கொண்டு அந்த எண்ணுக்கு ஓடிபி பெறலாம்.

உங்களுடைய ஓட்டு பி நம்பரை சரியாக பதிவு செய்த உடன் உங்களுக்கான பதிவு தொடங்கிவிடும் உங்களுடைய ஆதார் கார்டை ஸ்கேன் செய்து மொபைலில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய ஆதார் கார்டு எண்ணை சரியாக பதிவிட்டுக்கொண்டு உங்களுடைய பெயரை ஆதார் கார்டில் உள்ளது போலவே டைப் செய்து கொண்டு நீங்கள் ஸ்கேன் செய்து வைத்துள்ள ஆதார் கார்டை கேலரியில் சென்று தேடி அப்லோட் செய்து கொண்டு Submit செய்து விடுங்கள்.

அவ்வளவுதான் உங்களுடைய மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை நீங்கள் வெற்றிகரமாக இணைத்து விட்டீர்கள்.


How to link Aadhar number with eb service number

How to link Aadhar number with eb service number

How to link Aadhar number with eb service number

How to link Aadhar number with eb service number

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது குறித்த சந்தேகங்கள்:

மின் இணைப்பு எண் குடும்ப தலைவரின் பெயரில் இருந்து,அந்த குடும்பத்தின் தலைவர் அதாவது அப்பாவோ அம்மாவோ இறந்துவிட்டால்,எப்படி அவர்களுடைய ஆதார் எண்ணை இணைப்பது என்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கிறது.இந்ந நிலையில் தான் அதற்காகவே இந்த வலைத்தளத்தில் பிரத்யேக அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

  • OWNER (வீட்டு உரிமையாளர்)
  • TENANT(வாடகைக்கு குடியிருப்போர்)
  • OWNER BUT NOT NAME TRANSFERRED( வீட்டு உரிமையாளர் தான் இன்னும் பெயர் மாற்றம் செய்யவில்லை)
உங்கள் ஆதார் எண்ணை இணைக்கும் பொழுது மேலே குறிப்பிட்டுள்ளது போல மூன்று Options உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் மூன்றாவதாக இருக்கும் Option ஐ Click செய்து உங்களுடைய ஆதார் எண் மற்றும் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

ஒருவர் தங்களுடைய ஆதார் எண்ணை எத்தனை மின் இணைப்புகளுடன் வேண்டுமானாலும் இணைத்து கொள்ளலாம்.இதனால் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக பெறுவதில் எந்த வித சிக்கலும் இருக்காது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top