ஈசியான 20 திருக்குறள்கள் இதோ- 20 Easy Thirukkural in Tamil with Meaning

Vizhimaa
0

ஈசியான 20 திருக்குறள்கள் இதோ..  - 20 Easy Thirukkural in Tamil With Meaning
திருவள்ளுவர் எழுதிய 1330 குறளும்  
மிகவும் முக்கியமான மற்றும் எளிமையான குறள்களே... ஒரு மனிதனை முழுமை படுத்துவதற்கு இந்த 1330 கோள்களும் போதுமானவை தான் ஆனால் அதிலும் மிகவும் மிக மிக முக்கியமானதாகவும் படிப்பதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் மிகவும் எளிமையானதாக,   விழிமா வலைத்தளம் கருதும் ஒரு 20 திருக்குறள்களை உங்களுக்காக இங்கே பதிவிடுகிறது. இந்த ஒவ்வொரு திருக்குறளும் அதீத உள்ளார்ந்த அர்த்தங்களை கொண்டவையாக உள்ளது 133 அதிகாரங்களில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல இந்த இருபது திருக்குறளும். வெறும் முதல் 80 அதிகாரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை இவை.

20 எளிமையான திருக்குறள்க20 Easy Thirukkural in Tamil with Meaning

20 எளிமையான திருக்குறள்கள் மற்றும் அதன் விளக்கங்கள் - 20 Easy Thirukkural in Tamil with Meaning


விழிமா வலைத்தளம் உங்களுக்காகவே அதாவது வாசகர்களுக்காகவே சில பேராசிரியர்களிடம் அறிவுரைகளைக் கேட்டுக் கூட இந்த பதிவை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது உண்மையில் இந்த பதிவில் உள்ள 20 திருக்குறள்களும் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாகவே இருக்கும்.

வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது இந்த 1330 குறட்களையும் படித்து அதன் பொருளை மனதளவில் உணர்ந்து கொள்ளுங்கள் அது மனிதனாகிய நம் உள்ளத்தையும் ஆத்மாவையும் மிகவும் தூய்மைப்படுத்தி இந்த பரந்த உலகில் நம்மை நிலைக்க வைக்க கூடுதல் உதவியாக நிச்சயம் இருக்கும் திருவள்ளுவர் இயற்றிய இந்த திருக்குறள் ஒரு திருவரமே மனிதர்களாகிய நமக்கு...

20 எளிமையான திருக்குறள்கள் மற்றும் அதன் விளக்கங்கள் - 20 Easy Thirukkural in Tamil with Meaning1.

அதிகாரம் : 8 - அன்புடைமை
குறள்       ‌‌‌‌‌: 72  
‌திருக்குறள்:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்        -அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு

பொருள்:

அன்பு இல்லாதவர் தான் காணும் எல்லாவற்றையும் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவர் அன்பு உடையவரோ தனக்கு சொந்தமானதையும் பிறர்க்கு உரியதாக்குவார்.


2.

அதிகாரம் : 10 - இனியவை கூறல்
குறள் ‌‌:   100
‌திருக்குறள்: 

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய்கவர்ந் தற்று

பொருள்:

செவிக்கும் மனதுக்கும் இன்பம் தரும் வகையில் இனிப்பான சொற்கள் நம் மொழியிலே இருக்கும் பொழுது தீய சொற்களை பேசுவது என்பது நல்ல கனிந்த பழத்தினை விட்டுவிட்டு காயை கடும் காயை உண்பதற்கு ஒப்பாகும்.


20 எளிமையான திருக்குறள்களும் அதன் பொருளும் - 20 Easy Thirukkural in Tamil with porul


3.

அதிகாரம் : 11 - செய்நன்றி அறிதல்
குறள் ‌‌:     110
‌திருக்குறள்: 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் -உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு.

பொருள்:

இந்த உலகில் எத்தகைய அறத்தை அழித்தவர்களுக்கும் அதிலிருந்து வெளிப்படவும் வழி இருக்கிறது ஆனால் ஒருவர் நமக்கு செய்த உதவியை மறந்தவனுக்கு அதிலிருந்து விடுபட வழி என்பதே இல்லை.


4.

அதிகாரம்: 13 - அடக்கம் உடைமை
குறள் :  129

திருக்குறள்:

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு

பொருள்:

எரியும் நெருப்பினால் காயப்பட்டாலும் அது மனதினுள் ஆறிவிடும் ஆனால் ஒருவரின் நாவினால் தீய சொற்களை கேட்டு ரணமாகிய மனதின் வடுவானது எக்காலத்திலும் மறையாது.


5.
அதிகாரம்: 14 - ஒழுக்கம் உடைமை
குறள் : 138
திருக்குறள்:

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் -தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும்

பொருள்:

நல்ல ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வந்தால் அதை நமக்கு நன்மையை தரும் அதை விடுத்து தீய ஒழுக்க நெறிகளை கடைபிடித்தால் அவை துன்பத்தையே கொடுக்கும்.

படிப்பதற்கு மிகவும் ஈசியான 20 திருக்குறள்கள் - 20 Easy to Read Thirukkural in Tamil with Meaning


6.
அதிகாரம்: 16 - பொறை உடைமை
குறள் :  152

திருக்குறள்:

பொறுத்தல் இறப்பினை என்றும் -அதனை 
மறத்தல் அதனினும் நன்று


பொருள்:

பிறர் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்வது என்பது சிறந்த பண்பாகும் ஆனால் அதனை விடவும் அந்த தீமையையும் தீமை செய்தவரையும் மறப்பது என்பது மேலும் நன்மை பயக்கும்.


7.

அதிகாரம்: 30 - வாய்மை
குறள் :  293

திருக்குறள்:

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க -பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னை சுடும்

பொருள்:

தன் மனதிற்கும் மனசாட்சிக்கும் தெரிந்து ஒருவன் பொய் பேசினால்  அவனது நெஞ்சே அதாவது அவனுடைய மனசாட்சியே அவனை சுடும்

8.
அதிகாரம்: 40 - கல்வி
குறள் :  391

திருக்குறள்:

கற்க கசடற கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக

பொருள்:

கற்க வேண்டிய அற நூல்களை தெளிவாக கற்று அந்நூலின் நெறிப்படி வாழுதில் அறமாகும்.

9.
அதிகாரம்: 42 - கேள்வி
குறள் : 411

திருக்குறள்:

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் -அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம் தலை

பொருள்:

செல்வங்களில் எல்லாம் சிறந்ததும் உயர்ந்ததும் கேள்விச் செல்வமே.

10.

அதிகாரம்: 43- அறிவு உடைமை
குறள் :  423

திருக்குறள்:

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் -அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருள்;

ஒரு பொருளை யார் யார் வழியாக கேட்டாலும் அப்பொருளின் உண்மை தன்மையை உணர்வதே அறிவாகும்.

20 Easiest Thirukkural in Tamil - எளிமையான 20 திருக்குறள்


11.
அதிகாரம்: 43 -அறிவுடைமை
குறள் :  428

திருக்குறள்:

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்

பொருள்:

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சா திருத்தல் மடத்தன்மையாகும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுத்தன்மையாகும்.


12.
அதிகாரம்: 43 - அறிவுடைமை
குறள் :  430

திருக்குறள்:

அறிவுடையார் எல்லாம் உடையார் -அறிவிலார் 
என்னுடைய ரேனும் இலர்

பொருள்:

அறிவுடையவர்கள் தம் அறிவினாலே எல்லாம் உடையவராக கருதப்படுவார்கள். அறிவில்லாதவர்க்கு எது இருந்தும் எல்லாம் இருந்தும் அவர் இல்லாதவரே.

13.

அதிகாரம்: 45 - பெரியோரை துணைக்கோடல்
குறள் : 448

திருக்குறள்:

இடிப்பாரை இல்லாத ஏமாரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.

பொருள்:

செய்யும் தவறுகளை இடித்து உரைக்கும் சான்றோர்களோ அல்லது பெரியவர்களோ இல்லாத மன்னன் ஆயினும் தனிமனிதனாயினும் பகைவன் என ஒருவன் இல்லாமலே தானாகவே கெடுவான்.

20 Superb Thirukkural in Tamil - சிறப்பான 20 திருக்குறள்கள் 


14.
அதிகாரம்: 49 - காலம் அறிதல்
குறள் : 485

திருக்குறள்:

காலம் கருதி இருப்பர்; கலங்காது 
ஞாலம் கருது பவர்

பொருள்:
உலகத்தையே ஆழ நினைப்பவர் அதற்கான தக்க தருணம் வரும் வரை அதை எதிர்பார்த்து சோர்வின்றி காத்திருப்பர்.

15.
அதிகாரம் :51 - தெரிந்து தெளிதல்
குறள் : 504
திருக்குறள்:

குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.

பொருள்:
ஒருவரின் நல்ல குணங்களையும் அவரின் கெட்ட குற்றங்களையும் அளவிட்டு பார்த்து அவற்றில் எது மிகுதியோ அவற்றை வைத்தே அவரை அறிய வேண்டும்.

16.
அதிகாரம் : 67 - வினைத்திட்பம்
குறள் : 664

திருக்குறள்:

சொல்லுதல் யார்க்கும் எளிய -அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்

பொருள்:
நான் அதை செய்தேன் இதை செய்வேன் என்று சொல்லுதல் எல்லோருக்கும் எளிது தான் ஆனால் சொல்ல சொன்ன படி நிறைவேற்றுதல் என்பது அறிய செயலாகும்.

17.
அதிகாரம்: 79 - நட்பு
குறள் : 786
திருக்குறள்:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.

பொருள்:

முகங்கள் மட்டும் மலரும்படி ஒருவருடன் நட்புக் கொள்வது என்பது உண்மையான நட்பு ஆகாது அன்பால் உள்ளமும் மலரும் படி நட்புக் கொள்வதே உண்மையான நட்பு ஆகும்.

பொருளுடன் கூடிய எளிமையான 20 திருக்குறள்கள் - 20 interesting and Easy to Read Thirukkural in Tamil with porul


18.
அதிகாரம் : 79 - நட்பு
குறள்: 788
திருக்குறள்:

உடுக்கை இழந்தவன் கைபோல -ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு.

பொருள்:

ஆடைகள் கலைந்த பொழுது அதை சரி செய்ய தனது கைவிரல் ஆனது விரைவது போல நண்பர்களுக்கு ஒரு துன்பம் வரும் வேளையில் அவற்றை விரைந்து தடுக்க வேண்டும்.

19.
அதிகாரம் : 104 - உழவு 
குறள் : 1034

திருக்குறள்:

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை

பொருள்:

மக்கள் பல தொழில் சிறந்து இருந்தாலும் உணவிற்காக இறுதியாக அவர்கள் நாடுவது உழவுத் தொழில் ஒன்றையே எனவே இந்த உலகத்தில் உழவே முதன்மையானது.

20.
அதிகாரம் : 1- கடவுள் வாழ்த்து
குறள் : 1
திருக்குறள்:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு

பொருள்:

எழுத்துக்களுக்கு எல்லாம் அகரம் முதலாவது போல இந்த ஒட்டுமொத்த உலகிற்கும் இறைவன் முதன்மையானவராவார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top