காமராஜர் - வாழ்க்கை வரலாறு

Vizhimaa
0

காமராஜர் - வாழ்க்கை ஒரு பார்வை

தமிழகம் போற்றும் ஐயா காமராஜர் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் 10 ஆண்டுகள் சிறையிலும் 10 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் 10 ஆண்டுகள் முதலமைச்சராகவும் 10 ஆண்டுகள் அகில இந்திய அரசியல் தலைவராகவும் இருந்தார் ஆனால் தனக்கு என்று ஒரு வீடு கூட வாங்கிக் கொள்ளாத அரசியல்வாதி காமராஜராக தான் இருக்க முடியும் அவர் வாடகைக்கு குடியிருந்த வீடு ஒரு காலகட்டத்தில் ஏலம் போகக்கூடிய சூழ்நிலையில் இருந்தது.

Motivational Quotes in Tamil

 அந்த வீட்டுக்காரர் சொன்னார் ஐயா நான் இந்த வீட்டை விட்டுத்தான் என்னுடைய கடனை கட்ட வேண்டும் ஆகவே தாங்கள் இந்த வீட்டை காலி செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டார் இதனை அறிந்த ஜிகே மூப்பனார் வீட்டுக்காரரின் கடனை எல்லாம் கட்டி அந்த வீட்டை காமராஜரின் பெயருக்கு பத்திரம் செய்து எடுத்து வந்தார் அப்போது காமராஜர் ஏன் என் பெயருக்கு இந்த வீட்டை எழுதி வந்தீர்கள் நான் இறந்த பிறகு இந்த வீட்டை என் உறவினர்கள் தானே எடுத்துக் கொள்வார்கள் ஆகவே இதை காங்கிரஸ் அறக்கட்டளைக்கு எழுதி வாருங்கள் என்று சொன்னார் இத்தகைய கண்ணியமிக்க தலைவராக காமராஜர் விளங்கினார் என்பதே சிறப்பாகும்.

Kamarajar life history for speech Competition in Tamil

காமராஜரின் பிறப்பு:(kamarajar history For speech Competition)

காமராஜர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள் பிறந்தார் நாடார் சமூகத்தில் நடுத்தர வகுப்பைச் சார்ந்த குமாரசாமி சிவகாமி அம்மையார் என்போர் இவரது பெற்றோர்கள் குடும்ப தெய்வத்தின் பெயரான காமாட்சி என்பதே காமராஜருக்கும் முதலில் வைக்கப்பட்ட பெயராகும் நாளடைவில் இவரை அனைவரும் ராஜா என்று அன்பாக அழைத்தனர் இதன் காரணமாகவே பின்னாளில் இவரது பெயர் காமராஜர் என்று மாறிப் போயிற்று . காமராஜருக்கு ஒரே ஒரு சகோதரியும் உள்ளார் தன்னுடைய ஐந்தாம் வயதில் தன் பள்ளி படுப்பை தொடங்கினார் முதலில் உள்ளூரில் இருந்த ஒரு பள்ளியிலும் பின்பு ஏனாதி நாயனார் வித்யாசாலா என்ற பள்ளியிலும் அதன்பின் சத்ரிய வித்யாசாலா என்ற உயர்நிலைப் பள்ளியிலும் தனது கல்வியை தொடர்ந்தார் நாடார் சமூகத்தின் நலத்திற்காக அமைக்கப்பட்ட சத்ரிய வித்யசாரா என்ற பள்ளியில் சேர்ந்த ஒரு ஆண்டுக்குள் அதாவது தன்னுடைய ஆறாவது வயதில் தன் தந்தையை இழந்தார் காமராஜர் அதனை தொடர்ந்து சிறிது நாட்களுக்குள்ளாகவே தன்னுடைய தாத்தாவான சின்னப்ப நாடாரையும் இழந்தார் காமராஜர் இச்சூழ் நிலையில் தான் தாய் வழி மாமனான கருப்பையா அவர்கள் அந்த குடும்பத்திற்கு பொறுப்பேற்றார் இதனால் காமராஜர் தன் பள்ளி வாழ்க்கையை நடுநிலைப் பள்ளியோடு நிறுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாயிற்று 1954 ஆம் ஆண்டு அவர் முதலமைச்சரானபோது பள்ளி இறுதி படிப்பு வரை இலவச கல்வி திட்டத்தை கொண்டு வந்ததற்கு அவருக்கு நேர்ந்த இந்த இக்கத்தான சூழல் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.


அரசியலில் நுழைந்த காமராஜர் (two minutes Story about Kamarajar for speech Competition)

அப்பா மற்றும் தாத்தாக்கள் ஆகியோரின் இறப்புக்கு பின் காமராஜர் தன் பள்ளி படிப்பை தொடரவில்லை தன் மாமாவான கருப்பையா நாடாரின் துணிக்கடையில் பணிபுரிய தொடங்கினார் அதன்பின் திருவனந்தபுரத்தில் தன் தாய் வழி மாமனான காசிநாராயண நாடாரின் மரத் தொட்டியில் சிறிது காலம் பணிபுரிந்தார் விருதுப்பட்டி துணிக்கடையில் இருந்த பொழுது அவருக்கு தேசிய அரசியலில் நாட்டம் வரலாற்று தினந்தோறும் நாளிதழ்களை தவறாமல் படித்து வந்தார் தீண்ட தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட வியாஸ் ஈழவர் ஆகியோரை கோயிலில் அனுமதிக்க வேண்டி வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாகிரகம் போராட்டத்தில் கலந்து கொண்டார் முதலாம் உலகப் போர் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் படித்துக் கொண்டார் தேசிய காங்கிரஸின் விடுதலைக் கொள்கைகளில் ஆர்வம் கொண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையால் ஏற்பட்ட கொதிப்புணர்வோடு எழுவான தேசிய உணர்வும் அவரை ஆட்கொன்றது 1919 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தொண்டராக மாறினார் திருமணம் என்பதையே அறவே மறுத்துவிட்டு இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டார் 1921 ஆம் ஆண்டு சொந்த ஊரிலும் மாவட்டத்திலும் தான் சார்ந்த கட்சியை வளர்க்கத் தொடங்கினார் இதற்கு அவருடைய சமூகத்தை சார்ந்த செல்வாக்கு மிகுந்த சிலரால் பலத்தை எதிர்ப்பும் இருந்தது இதற்கிடையில் புகழ்பெற்ற தலைவரான எஸ். சத்தியமூர்த்தி தொடர்பு ஏற்பட்டு அவருடைய நம்பிக்கைக்குரிய சீடரானார் காமராஜர்


1924 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தியோடு சேர்ந்து தனது சொந்த மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார் 1927 ஆம் ஆண்டு செப்டம்பரில் காந்தியை நேரில் கண்டு அவரிடத்தில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தவும் ஜென்ரல் நைல்டு என்பாரின் சிலையை அகற்றவும் ஒப்புதல் பெற்றார்.


1922 ஆம் ஆண்டு சாத்தூர் வட்டத்தில் பெரியார் அவர்கள் நடத்திய காங்கிரஸ் பேரவைக்கு செயலாளராக இருந்து அப்ப பேரவையில் மாநில காங்கிரஸ் பேரவையின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் விருதுநகர் நகராட்சி தொகுதியில் போட்டியிட்டு அதே ஆண்டு வெற்றியும் பெற்றார்.


1928 ஆம் ஆண்டு சைமன் குழுவை எதிர்த்து மறியல் செய்தார் திருமலை நாயக்கர் மகாலுக்கு முன் சிறந்த பத்திரிகையாளரான போத்தாலி ஜோசப்பின் சகோதரர் ஜார்ஜ் சோஷப் என்பவரோடு சேர்ந்து இம்ம மரியாதை நடத்தினார்


1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதால் அலிபுர் சிறையில் 2 ஆண்டுகள் வைக்கப்பட்டார் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதால் முதன் முதலில் சிறை சென்றார் காமராஜர்.


1931 ஆம் ஆண்டு காந்தி இரவின் ஒப்பந்தத்தின் மூலமாக காமராஜர் விடுதலை செய்யப்பட்டார் காமராஜரின் விடுதலைக்காக விருதுநகர் மாவட்ட மக்கள் உற்சாகமாக வரவேற்று இருந்தனர் அவருக்காக மாபெரும் ஊர்வலம் நடத்தப்பட்டது அந்த வரவேற்பில் காமராஜர் நிகழ்த்திய உரையில் தனக்கு சிறிதும் மண்டைக்கனம் வந்து விடக்கூடாது என இறைவனிடம் வேண்டுவதாக கூறினார் இப்ப பேச்சு அவரது அடக்க உணர்வை காட்டியது.

விருதுநகரில் உள்ள வயது முதிர்ந்த பெரியோர்கள் அவர் பேசிய பேச்சினை இன்றும் நினைவு கூர்ந்து பாராட்டுகிறார்கள் என்பது உண்மையாகும்.


காந்தி 1932 ஆம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் இருந்து திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார் இதனைத் தொடர்ந்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் அடக்குமுறை கையாளப்பட்டது இந்த அடக்கு முறையை எதிர்த்து போராடியதற்காக இரண்டாவது முறையாக காமராஜர் சிறையில் அடைக்கப்பட்டார் முதலில் ஓராண்டு திருச்சி சிறையிலும் பின்னர் வேலூர் சிறையிலும் வைக்கப்பட்டார் வேலூர் சிறையில் இருந்த பொழுது தான் பகத்சிங் அவர்களுடன் காமராஜருக்கு தொடர்பு ஏற்பட்டது


காமராஜரின் அரசியல் வாழ்க்கையில் 1936 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான வருடமாக கருதப்படுகிறது இந்த வருடம் தான் காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் பேரவையில் காங்கிரஸ் தலைவராக திரு சத்தியமூர்த்தி அவர்களும் செயலாளராக காமராசர் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


1937 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் காமராஜருக்கு தமிழகம் முழுவதையும் தெரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது இதன் மூலம் நேரு அவர்களுடனும் நெருங்கி பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அக்காலத்தில் நல்ல செல்வாக்கு பெற்ற "நீதிக் கட்சியை" காமராசர் வென்றார் அது மட்டுமல்லாமல் அக்கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் பயண கட்டணத்தையும் இழக்கும் அளவிற்கு மிகுந்த செல்வாக்கு படைத்தவராகவும் வளர்ந்து இருந்தார் காமராஜர்


1937 ஆம் ஆண்டு காமராஜர் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதியிலும் இரட்டை தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இவ்வெற்றி நீதி கட்சியின் முதுகெலும்பாக இருந்தவரும் அவர் இனத்தை சார்ந்தவருமான வி வி ராமசாமி என்பாரின் செல்வாக்கை எதிர்த்து பெற்ற வெற்றியாகும்


விருதுநகர் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காமராசரை நகராட்சி தலைவராக அதன் உறுப்பினர்கள் எண்ணிய போது அதனை காமராஜர் மறுத்து விட்டார் காங்கிரஸ் கட்சியின் செயலாக்கங்களில் முழுமையாக ஈடுபட வேண்டி இருந்ததால் மேற்குறித்த பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை


1937 ஆம் ஆண்டிலேயே ராஜாஜியின் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 1940 இல் நடந்த காங்கிரஸின் தலைவர் பதவிக்கு சத்தியமூர்த்தியால் காமராஜர் அவர்களும் திரு ராஜாஜி அவர்களால் சிபி சுப்பையா அவர்களும் நிறுத்தப்பட்டனர் சுப்பையாவை விட மூன்று வாக்குகள் அதிகம் பெற்று காமராஜர் தலைவரானார் இதன் சத்தியமூர்த்தி காங்கிரசின் செயலாளராக மாறினார் 1919 ஆம் ஆண்டு சாதாரண தொண்டனாக தொடர்ந்த இவரது அரசியல் வாழ்க்கை 21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க வைத்தது 14 ஆண்டுகள் இப்ப பதவிகள் நிலைத்தால் காமராஜர்


சத்தியமூர்த்தியின் சிறந்த கண்டுபிடிப்பு காமராஜர் என்று எண்ணும்படி வாழ்ந்து காட்டினார் காமராஜர் அதன் பின் 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தார்


1940 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கியது ஆளுநரே அமைச்சர்களின் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார் இதே நேரத்தில் ஆங்கில அரசு இந்திய மக்களின் இசைவை பெறாது இந்தியாவை போரில் ஈடுபடுத்த எண்ணியது காந்திஜி நேரு ஆகியவர்கள் தனிப்பட்ட முறையில் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார்கள் ஆங்கிலேயர்கள் குறிப்பிட்ட சில தலைவர்கள் மீது மட்டும் அடக்கு முறையை கையாண்டனர் அப்பொழுது சென்னை ஆளுநராக இருந்த சர் ஹோம் என்பவர் போருக்காக நிதி திரட்டி கொண்டிருந்தார் அப்பொழுது காமராஜர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று போருக்காக நிதி தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட விருப்பமுள்ளவர்களின் பெயர்களை சேகரித்துக் கொண்டு காந்திஜியை பார்க்க சென்றார் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் படி அவர் அப்பொழுது கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் 1941 ஆம் ஆண்டு காவலில் வைக்கப்பட்டிருந்த போது விருதுநகர் நகராட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதாவது சிறையில் இருக்கும் போது ஒரு தேர்தலில் வென்று இருக்கிறார் காமராஜர் அவர்கள் அவ்வாண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டவுடன் விருதுநகர் நகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார் காமராஜர் நகராட்சி தலைவராக பொறுப்பும் ஏற்றுக் கொண்டார் கட்சி பணி காரணமாக மிக விரைவில் நகராட்சி தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொண்டார் காமராஜர்


1942 ஆம் ஆண்டு காங்கிரஸ் பணிக்குழு ஆகஸ்ட் 8ஆம் தேதியில் பம்பாயில் நடந்த கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்தது பம்பாய் கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்த காமராஜர் அரக்கோணத்தில் இறங்கி அங்கிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கெல்லாம் சென்று கட்சியின் கொள்கைகளை தொண்டர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் அப்பொழுது ஆகஸ்ட் 16ஆம் தேதி அம்ரோலில் சிறையில் அடைக்கப்பட்டார் பின் வேலூர் சிறைக்கும் மாற்றப்பட்டார் மூன்று ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு 1945 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்


காமராஜர் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு போராட்டங்களிலும் திட்டங்களிலும் ஈடுபட்டு 25 ஆண்டுகளில் 3000 நாட்களை சிறையில் கழித்தார் சிறை வாழ்க்கையின் போது படிப்பது அனைவருடனும் பேசுவது ஆகியவற்றின் மூலம் தம்மைத் தானே நன்கு தகுதிப்படுத்தியவர் ஆக மாற்றிக்கொண்டார்


1943 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி இறந்த பொழுது காமராஜர் சிறையில் இருந்தார் சத்தியமூர்த்தி இறந்துவிட்டபடியால் ராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறினார் பின்னவர் 1945 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸில் பதவி ஏற்க முயன்று தோல்வியுற்றார் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் 1942 ஆம் ஆண்டு இயக்கத்தில் பங்கேற்காதவர்கள் கட்சி தலைமையில் இருக்கக் கூடாது என்று தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது 1952 ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதால் ராஜாஜி மீண்டும் காங்கிரஸ் அமைச்சரவையின் தலைமை பொறுப்பை ஏற்க அழைக்கப்பட்டார் அப்பொழுது விடுதலை பெற்ற காமராசர் தாமாகவே விரும்பி இரண்டு ஆண்டுகள் அமைச்சரவையில் இருந்து விலகி இருந்தார் பின் நேரு தி.டி. கிருஷ்ணமாச்சாரி போன்றோரின் வேண்டுகோளுக்கிணங்க 1954 ஆம் ஆண்டு அமைச்சரவையில் தலைமை பொறுப்பை ஏற்றார்


1946 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் தமிழ்நாட்டில் 25 இடங்களில் 165 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது இதில் காமராஜர் சாத்தூர் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து சென்னை மாநில சட்டமன்றத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் சட்டமன்றத்திற்கு நடந்த தலைமைப் போட்டியில் ஆந்திர கேசரி தங்குதூரில் பிரகாசம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1947 இல் பதவி விலகிக் கொள்ளவே அவ்விடத்தில் ஓ.பி ராமசாமி செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ராஜாஜி குழுவை சார்ந்த டாக்டர் சுப்பராயனை வென்று வந்தவர்.

காமராஜரின் சாதனைகள்:

மகாத்மா காந்தியின் சீடராகவும் நேருவின் வாரிசாகவும் வந்த காமராஜர் தியாகங்கள் செய்து, பலமுறை ஜெயிலுக்கு சென்று பல துன்பங்களுக்கெல்லாம் ஆளாகியும் தனக்கு திருமணமே வேண்டாம் என்றும் நான் தேசத்திற்காகவே என் உயிர் பொருள் ஆவி மூன்றும் தத்தம் செய்கிறேன் என்றும் சபதம் எடுத்துக் கொண்டார். 

அதன்படி சுதந்திரம் கிடைத்தவுடன் தன் கைக்கு அதிகாரம் கிடைத்ததும், பாரத மந்திரியாக இருந்து பணியாற்றி வரும்போது இந்த மாகாண மக்கள் அதாவது தமிழ்நாடு மக்கள் பட்ட கஷ்டங்களை நேரில் பார்த்து தெரிந்து கொண்டதால் தமிழ்நாடு முழுவதும் சாலைகள் அமைத்தார். கண்மாய்கள், ஏரிகள், அணைகள் கட்டுவதும் அநேக பாலங்கள் அமைப்பதும் முக்கிய பணிகளாக செய்தார். தமிழ்நாடு முழுவதும் மின்விளக்கு எரிய வேண்டும் என்று கிராமங்கள் தோறும் மின்சார விளக்குகள் போட்டார்.


அத்துடன் நிற்கவில்லை கிராமங்கள் தோறும் பள்ளிகள் அமைத்தார் பெரிய நகரங்கள் தோறும் கல்லூரிகளையும் உயர்நிலைப் பள்ளிகளையும் தொடங்கினார். மாணவர்கள் படிப்பதற்கு கஷ்டப்படுவார்களே என்று நினைத்து பள்ளிகள் அனைத்தும் சம்பளம் இல்லாமல் இலவச கல்வி ஆக்கினார். அத்துடன் விடவில்லை ஏழை மக்களின் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் உணவு இல்லாமல் கஷ்டப்படுவார்களே என்று நினைத்து சிறு பிள்ளைகளுக்கு படிப்பதற்கு மதிய உணவும் இலவச புத்தகமும் வழங்கினார். எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியாக சீருடை என்று சட்டங்கள் கொண்டு வந்தார். அரசாங்கமே பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்க ஏற்பாடும் செய்தார். கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக ஸ்காலர்ஷிப் பணமும் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். மாணவர்கள் வருடத்திற்கு ஒருமுறை பிற மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்யவும் வசதி செய்திருந்தார்.60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் கொடுத்து வந்தார். 


சுதந்திரம் வாங்கியவுடன் தமிழ் மாகாண போலிஸ் என்றால் அதற்கு ஒரு சிறப்பு வேண்டும் என்று பிரிட்டிஷ் சர்கார் தொப்பியை மாற்றி நமது முந்தைய அரசர்கள் கிரீடம் போன்று தொப்பியை மாற்றினார். ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள் மருத்துவமனைகள் திறந்து வைத்தார். பாஷை வாரி மாகாணங்கள் பிரிந்த பின்பு நமது மாகாணம் தமிழ்நாடு தான் என்று சட்டசபையில் பாஸ் செய்து டெல்லி பார்லிமென்ட்க்கு அங்கீகாரம் கேட்டு அனுப்பி இருந்தார். மலையாளத்துடன் இணைக்கப்பட்டு அவதிப்பட்டு கொண்டிருந்த தமிழர்களையும் தமிழ்நாட்டுடன் சில பகுதியான நாகர்கோவில் செங்கோட்டை சென்னையில் ஒரு பகுதியும் நம் பக்கம் திருத்தணியும் தமிழ்நாட்டுடன் சேர்த்தார்கள்.

தினம்தோறும் சாப்பிடும் நெல் அரிசி இருக்கிறதே 5,6,8  5,6, 27 ஐ.ஆர் 25 ,கோடி மிளகு நெல் அறுபதுக்கு இருபது நெல், ரப்பர் சம்பா நெல் ஜப்பான் நெல் ஜெர்மன் இன்னும் பல ஊர்களில் இருந்து விமான மூலம் 10 படி அளவுக்கு மாதிரிகள் கொண்டு வந்து ஆடுதுறை தஞ்சாவூர் ஜில்லாவில் சர்க்கார் விதைப்பண்ணையில் பயிர் செய்து உற்பத்தி செய்து வளர்த்த நிழல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பின் தங்கிய வகுப்பினர் ஆகிய ஹரிஜன மக்களை தீர்ந்தபடாதவர்கள் ஆக்கி அவர்களை கோவில்களில் உள்ளே சென்றால் அபராதம் விதித்தும் ஹோட்டல்களில் அரிஜனங்கள் போகக்கூடாது ஓட்டல் வாசலில் நின்று கொண்டு தேங்காய் கொட்டாட்சியில் தண்ணீர் வாங்கி குடிப்பதும் காப்பியும் கொட்டாச்சியர் வாங்கி குடிப்பதும் வழக்கமாக வைத்திருந்தனர் பிள்ளைகள் தங்கள் பள்ளியில் படிப்பதற்கு அனுமதி கிடையாது என்றும் பஸ் ரயில்களிலும் பிரயாணம் செய்ய முடியாத அளவில் இருந்ததை காங்கிரஸ் சர்கார் வந்தவுடன் ஹரிஜனங்கள் இந்நாட்டில் பிறந்தவர்கள் என்று சம உரிமை வழங்கப்பட்டது ஹரிஜனங்கள் முன்னேற்றம் அடைவதற்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தது காமராஜர் ஆட்சி தான்.

காமராஜரின் சொத்து கணக்குகள்:

உலகத் தலைவர்களில் சிறந்தவராகவும் தனது ஆட்சி காலத்தை பொற்காலமாகவும் மாற்றி தந்த தலைவர்களில் ஒருவர் காமராஜர் ஐயா அவர்கள் அவர்கள் இறந்த போது அவர் தன்னுடைய சொத்துக்களாக வைத்திருந்தவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • சட்டை பையில் 100 ரூபாய்.
  • வங்கிக் கணக்கில் 125 ரூபாய்
  • கதர் வேட்டி நான்கு
  • கதர் துண்டு 4
  • கதர் சட்டை 4
  • செருப்பு ரெண்டு ஜோடி
  • கண் கண்ணாடி ஒன்று
  • பேனா ஒன்று
  • சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள் ஒன்று இரண்டு.


காமராஜரின் இறுதிக்காலம்:

இந்திராகாந்தியின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற சில கசப்பான நிகழ்வுகளின் காரணமாக அதாவது இந்திராகாந்தி அம்மையார் ஏற்படுத்திய நெருக்கடி நிலை அதனோடு பல விடுதலை போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டது என் பல்வேறு நிகழ்வுகள் அவரை சோர்வடைய செய்தது.காந்தி மகாத்மாவின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று மதிய உணவை உண்டு நிம்மதியாக உறங்கிய காமராஜர் நிரந்தரமாகவும் உறங்கி போனார்.காந்தி எனும் மகாத்மாவின் பிறந்த நாள் கல்விக்கண் திறந்த காமராஜரின் நினைவு நாள் ஆனது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top