புன்னகை தின வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

சர்வதேச புன்னகை தின வாழ்த்து கவிதைகள்; - புன்னகை குறித்த கவிதைகள்

வருடாந்திரம் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று உலக புன்னகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கு காரணமாக இருப்பவர் smiley என்ற பந்தை கண்டுபிடித்த ஹார்வி போல்‌ .இவர் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

Sirippu kavithaigal

புன்பட்ட நெஞ்சம் புன்னகையால் மட்டுமே பூரணமாய் குணமடையும் என்பதே உண்மை.புன்னகை தரும் பேராற்றல் கிடைப்பது அரிதினும் அரிது.எப்பொழுதும் முகத்தில் புன்னகையை சுமக்கும் நபர்களை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தயாசங்களில் ஒன்று தான் புன்னகை.


புன்னகை கவிதைகள் - quotes about smiling


இந்த புன்னகை தினத்தில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள புன்னகை பற்றிய கவிதைகள் இங்கே பதிவிடப்படுகின்றன.

புன்னகை கவிதைகள்;

புன்னகை தரும்

இன்பத்தையும்

இதத்தையும்

எந்த பொன்ன(ந)கையும்

தருவதில்லை
சிலருக்கு புன்னகை 

என்பது வலிகளை 

மறைக்கும்

அழகான முகமூடி
வாழ்க்கையின்

எல்லா துன்பங்களையும்

கடந்து செல்ல கடவுள்

கொடுத்த கை தான்

புன்னகை(கை)
நீங்கள் படும்

கஷ்டங்களுக்கெல்லாம்

நிரந்தர தீர்வை

புன்னகை தராமல்

இருக்கலாம் ஆனால்

நின்று சமாளிக்கும்

தெம்பை புன்னகை தரும்
ஒவ்வொருவரும்

புன்னகைத்து கொண்டு

தான் வாழ்கிறார்கள்

உள்ளத்தின் புன்களை

மறைத்து கொண்டு
புன்பட்ட மனதை

புகையை விட்டு

மட்டும் அல்ல

புன்னகையை

வைத்து கூட

ஆற்றலாம்...
இவர் என்ன நினைப்பார்

அவர் என்ன நினைப்பார்

என்று நொந்து வாழாமல்

இன்று இருப்பார்

நாளை இறப்பார் என்று

புன்னகைத்து வாழுங்கள்
தன் துன்பங்களை

மறந்து ஒருவன்

வாழ வேண்டும்

என்று நினைத்தால்

புன்னகை ஒன்றே

புதுவழி
ஒவ்வொரு மனிதனும்

ஏங்குவது புன்னகைக்கும்

நொடிகளை தான்
ஒருவரின் புன்னகையின்

பின்னால் ஆயிரம்

வலிகள் கூட இருக்கலாம்...

ஒரு புன்னகையில்

அத்தனையும் மறந்து

போகும்...

துன்பம் வரும்

வேலையிலும் சிரிங்க

என்று பெரியவர்கள்

சொல்வது சிரித்தால்

துன்பம் (மறைந்து)

போகும் என்பதற்காக

அல்ல.(மறந்து) போகும்

என்பதற்காக
மனதிற்கு 

நேர்த்தியான

நேர்மறை எண்ணங்கள்

தோன்றுவதற்கு

புன்னகை எனும்

பூரணம் தேவை...
வாழ்க்கையோடு

போட்டிப் போட

புன்னகை எனும்

பூஸ்ட் தேவை
பூக்களை

அனைவருக்கும் 

பிடிப்பதற்கு

காரணம் அது 

மலர்ந்திருப்பதால் 

தான் அதுபோல்

உன்னையும் அனைவருக்கும்

பிடிக்கும் உன் முகம்

புன்னகையால் 

மலர்ந்திருந்தால்
ஏழையின் சிரிப்பிலும்

மழலையின் சிரிப்பிலும்

மட்டும் தான் இறைவனை

பார்க்க முடியும்

என்பதில்லை,யாரையும்

புன்படுத்தாமல் புன்னகைக்கும்

நபரிடமும் இறைவன் 

இருக்கிறார்.
இதயம் தாங்கும்

இடிகளையும்

அடிகளையும் ஆதாரவாய்

தாங்கிக் கொள்வது

புன்னகை மட்டுமே
காசும் பணமும்

கழுத்து வரை 

வைத்திருப்பவனால்

கூட சிரிக்காமல் 

இருக்க முடியாது
உடலும் உள்ளமும்

ஆரோக்கியமாய்

இருக்க புன்னகை

என்பது மிக அவசியம்
ஆயிரம் ஆயிரம்

வலிகளையும்

எத்தனை எத்தனை

கோபங்களையும்

குணப்படுத்துவது

புன்னகை தான்
மனிதனின்

குணாதியங்களில்

அனைவராலும் விரும்பப்படும்

ஒன்று புன்னகை
உங்களை சிரிக்க

வைக்கும் மனிதர்களை

எப்பொழுதும் மறக்காதீர்கள்

அவர்கள் தான் உங்களை

வாழ வைக்கிறார்கள்...
யார் மனதையும்

புன்படுத்தாமல்

சிரிப்பதே‌ உள்ளத்திற்கும்

உலகிற்கும் நன்மை பயக்கும்
மனிதன் இன்னும் 

மிருகமாக மாறாமல்

பார்த்துக் கொள்வது

புன்னகை எனும்

ஒரு உணர்வே...
வாழ்க்கையின்

சில நிம்மதியான

இடைவெளிகளை 

தருவது புன்னகையே
புன்னகையில்

வலியை மறைக்கும்

கலை அனைவருக்கும்

வருவதில்லை
எதையோ‌ தேடி

ஏதோ ஒன்றின்

பின்னால் ஓடி

மறையும்‌‌ வாழ்க்கையில்

நம்மை‌ நிகழ்வாக

வைத்திருப்பவை

நாம் புன்னகைக்கும்

தருணங்களே...
இறுதி நாட்களில்

எண்ணிப் பார்க்க

நாம் புன்னகைத்த

தருணங்கள் நமக்கு

நிச்சயம் தேவை...

சேமித்து வையுங்கள்

புன்னகைத்த தருணங்களை
பல சோதனைகளையும்

வேதனைகளையும்

தாங்கிக் கொள்ளவும்

தாண்டிச் செல்லவும்

புன்னகை தேவைப்படுகிறது
புன்னகைப்பவர்கள் 

எல்லாம் வலி

இல்லாமல் வாழ்பவர்கள்

இல்லை,வலியை

மறைக்கும் வழியாய்

புன்னகையை

தேர்ந்தெடுத்தவர்கள்
இங்கு

மகிழ்ச்சியாய்

இருக்கும் போது

புன்னகிப்பவர்களை

விட பலவற்றை

மறக்க வேண்டும்

என்று புன்னகை

செய்பவர்களே அதிகம்
புன்னகை என்ற

ஒன்று இல்லாமல்

போனால் மனிதனுக்கும்

மிருகத்துக்கும் வித்தியாசம்

இல்லாமல் போயிருக்கும்
வாழ்க்கையின் இறுதி 

நிமிடங்களில் நம்

நினைவுகள் சுமக்க

விரும்புவது நாம்

புன்னகைத்து மகிழ்ச்சியாய் 

இருந்த நொடிகளையே
வாழ்க்கையில்

இப்போது சிரிக்கலாம்

அப்போது சிரிக்கலாம்

என்று தள்ளி போடாதீர்கள்

சிரிக்க தவற விட்ட

நொடிகள் மீண்டும்

கிடைப்பது அரிது
வாழ்க்கை பாடங்களில்

நாமகவே கற்றுக் 

கொள்ள வேண்டிய 

பாடம் புன்னகை
புன்னகையோடு

வாழ்க்கையை எதிர்

கொள்ள பழகிவிட்டால்

வாழ்க்கை மிகவும்

எளிதாக இருக்கும்
பணத்தை தேடி

தேடி பாதைகளும்

பாதமும் தேய்ந்து

போகும் போதெல்லாம்

பக்கபலமாய் தோல்

கொடுப்பது புன்னகை

ஒன்றே
புன்னகைைத்தால்

புத்துணர்ச்சி கிடைக்கும்

என்பது உண்மையே

ஆனால் பிறரின்

வேதனை கண்டு நீ

சிரித்தால் அது

அவர்கள் மீதுள்ள

காழ்ப்புணர்ச்சியே
இறைவனிடம் வேண்டுங்கள்

நான் புன்னகைக்கும்

நிமிடங்கள் என்

நினைவில் எப்பொழுதும்

நிற்க வேண்டும் என்று
நிகழ்காலத்தில் நம்மை

நகர்த்தி செல்வது

புன்னகை மட்டுமே
எல்லோருக்கும்

எல்லாமும் இங்கு

கிடைப்பதில்லை;

ஆனால் புன்னகைக்கும்

வாய்ப்பு அனைவருக்கும்

நிச்சயம் கிடைக்கும்
பல விடை தெரியாத

கேள்விகளுக்கு

மௌனமும் 

புன்னகையுமே விடையாகி

போகின்றன
என்னதான் யோசித்து

யோசித்து வாழ‌ வேண்டிய

சூழ்நிலை வந்தாலும்

சிரிக்ஙலாமா வேண்டாமா

என்று யோசித்து நிற்காதீர்கள்
மனம் தளரும் 

போதெல்லாம்

துணை நிற்பதும்

தூக்கி விடுவதும்

புன்னகை தான்
உங்களை சிரிக்க

வைத்த நபர்களை

ஒருநாளும் 

மறக்காதீர்கள்; அவர்கள்

உங்களுக்கு கொடுத்தது

சிரிப்பு அல்ல; மதிப்பு
புன்னகை எல்லா 

காயங்களையும் ஆற்றும்

வல்லமை கொண்டது....
ஏழையின்

புன்னகை 

எல்லாவற்றையும் 

விட விலைமதிப்பற்றது
மகிழ்ச்சி எனும்

உணர்ச்சியின்

வெளிப்பாடும்

சாரமும் புன்னகை

தான்
ஒருவர் எவ்வளவு

சொத்து சேர்த்து

வைத்திருந்தாலும்

அவரும் விரும்புவது

சிரித்து மகிழ்ந்து

வாழும் நொடிகளை

தான்
வாழ்க்கை என்னும்

கடலில் தத்தளிக்கும்

நிலையில் புன்னகையை

துணைக்கு வைத்துக்

கொள்வது ஒன்றே 

சிறந்த வழி
உங்களுக்கு சிரித்து

வாழ தெரியாவிட்டால்

உங்களால் வாழ்க்கையை

ரசித்து வாழ முடியாது
நீங்கள் சிரித்து

வாழுங்கள்;உங்களை

பார்த்து மற்றவர்கள்

சிரிப்பது போல்

வாழ்ந்து விடாதீர்கள்
வெளியில்‌

சொல்லாமல் போனாலும்

தன்னை புன்னகையோடு

அறிமுகப்படுத்தும்

நபர்களையே அனைவருக்கும்

பிடிக்கும்
மகிழ்ச்சியான

தருணங்களை ரசித்து

மகிழ இறைவன் கொடுத்த

குணமே புன்னகை
சிலர் வலிகளை

மறக்க 

புன்னகைக்கிறார்கள்

சிலரோ மற்றவர்களுக்கு

வலியை தர 

புன்னகைக்கிறார்கள்
என்றோ ஓர்

நாள் நான்

மகிழ்ச்சியாக

புன்னகைக்கும்

நாள் வரும் என்ற

நம்பிக்கையில்

தான் இங்கு பலரது

வாழ்க்கை 

ஓடிக்கொண்டிருக்கிறது
புன்னகையோடு

வாழ்க்கையை எதிர்

கொள்ளும்‌ மனிதனுக்கு

ஒவ்வொரு நாள்

புதிய நாளாக தான்

அமையும்
முடிந்த வரை 

புன்னகையோடு 

நீங்களும் வாழ்ந்து,

முடியும் வரை 

மற்றவர்களை

புன்னகையோடும்

வாழ வைத்து

பாருங்கள்...

வாழ்க்கை அழகாகும்.
நினைத்த படி

வாழ முடியாமல்

போனதால்

நகைக்காமல் 

வாழ்க்கையை நகர்த்தி

விடாதீர்கள்
எல்லாம்

பெற்ற மனிதனும்

எதுவும் இல்லாத

மனிதனும்

வாழ நினைப்பது

என்னவோ புன்னகைத்து

தான்
ஒரே முறை

தான் இந்த

வாழ்க்கை என்று

புரிந்து கொண்ட

மனிதன் புன்னகைக்க

மறப்பதில்லை
மனிதன் எத்தனை

முறை தோற்றாலும்

துவண்டு விடாமல்

துணை நிற்கும்

ஒரு உணர்வு

புன்னகை
பூக்களை பார்க்கும்

பொழுதெல்லாம்

நினைத்து பாருங்கள்

பூக்கள் சிரித்து

கொண்டு இருந்தால்

தான் அதற்கு மதிப்பு

என்று
மற்றவர்களின்

உணர்ச்சிக்கு

மதிப்பு அளித்து

மகிழ்ந்து பாருங்கள்

புன்னகையின்

பக்குவம் புரியும்
வாழ்க்கையில்

எவ்வளவு தூரம்

பணத்திற்காக

ஓடினாலும், 

புன்னகையை

மறந்த யாராலும்

நிரந்தரமாய்

மகிழ முடியாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top