22-12-2022(வியாழன்)-ராசி பலன்கள் - 22-12-2022 - Thursday (Tomorrow Rasi Palan

Vizhimaa
0

நாளைய (22-12-2022) ராசி பலன்கள்; Tomorrow Rasi Palan

மேஷம்
டிசம்பர் 22, 2022 - Tomorrow Rasi Palan

Tomorrow Rasi Palan in Tamil

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்



அஸ்வினி : ஏற்ற, இறக்கமான நாள்.

பரணி : சோர்வு உண்டாகும். 

கிருத்திகை : நன்மை ஏற்படும். 
---------------------------------------


ரிஷபம்
டிசம்பர் 22, 2022 - Tomorrow Rasi Palan



பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபார பணிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசி கிடைக்கப் பெறுவீர்கள். சாதுரியமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். பயணங்கள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



கிருத்திகை : எண்ணங்கள் மேம்படும். 

ரோகிணி : மேன்மை உண்டாகும். 

மிருகசீரிஷம் : ஆசி கிடைக்கும். 
---------------------------------------


மிதுனம்
டிசம்பர் 22, 2022 - Tomorrow Rasi Palan



பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் தீர்வு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். சோர்வு நீங்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

திருவாதிரை : நெருக்கம் உண்டாகும்.

புனர்பூசம் : தீர்வு கிடைக்கும். 
---------------------------------------


கடகம்
டிசம்பர் 22, 2022 - Tomorrow Rasi Palan



பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தடைகள் விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும். 

பூசம் : பாராட்டுகள் கிடைக்கும். 

ஆயில்யம் : சாதகமான நாள்.
---------------------------------------


சிம்மம்
டிசம்பர் 22, 2022 - Tomorrow Rasi Palan



மனதிற்கு பிடித்த ஆடை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உணவு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். களிப்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மகம் : லாபம் மேம்படும். 

பூரம் : மகிழ்ச்சியான நாள்.

உத்திரம் : திறமைகள் வெளிப்படும். 
---------------------------------------


கன்னி
டிசம்பர் 22, 2022 - Tomorrow Rasi Palan



இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சிறு வியாபாரம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். சகோதரர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். எதிலும் திருப்தியற்ற சூழல் ஏற்பட்டு நீங்கும். கற்றல் திறனில் மாற்றம் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பத்திரம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். தனவரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



உத்திரம் : மேன்மை ஏற்படும்.

அஸ்தம் : திருப்தியற்ற நாள்.

சித்திரை : லாபம் மேம்படும்.
---------------------------------------


துலாம்
டிசம்பர் 22, 2022 - Tomorrow Rasi Palan



நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பரிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



சித்திரை : முயற்சிகள் கைகூடும். 

சுவாதி : அனுசரித்து செல்லவும்.

விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------


விருச்சிகம்
டிசம்பர் 22, 2022 - Tomorrow Rasi Palan



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். தேவையற்ற வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சுக்களில் கனிவு வேண்டும். அரசு பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் பகைமையின்றி செயல்படவும். உதவி கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : சேமிப்பு குறையும்.

அனுஷம் : கனிவு வேண்டும். 

கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------


தனுசு
டிசம்பர் 22, 2022 - Tomorrow Rasi Palan



சிந்தனையின் போக்கில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், காலதாமதமும் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : சோர்வு ஏற்படும்.

பூராடம் : மாற்றமான நாள்.

உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும். 
---------------------------------------


மகரம்
டிசம்பர் 22, 2022 - Tomorrow Rasi Palan



மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். இன்பச் சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் தெளிவும், புலமையும் வெளிப்படும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் படிப்படியாக குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்ப்புகள் விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : ஆதரவான நாள்.

திருவோணம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

அவிட்டம் : குழப்பம் குறையும்.
---------------------------------------


கும்பம்
டிசம்பர் 22, 2022 - Tomorrow Rasi Palan



காப்பீடு சார்ந்த தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். வாகன பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவு பிறக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். கற்பனை திறனும், ரசனையும் வெளிப்படுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மருத்துவம் சார்ந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆர்வமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : வாய்ப்புகள் ஏற்படும். 

சதயம் : தெளிவு பிறக்கும். 

பூரட்டாதி : லாபம் அதிகரிக்கும். 
---------------------------------------


மீனம்
டிசம்பர் 22, 2022 - Tomorrow Rasi Palan



புதிய வியாபாரம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். தொலை தூர பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூக பணிகளில் மதிப்பு மேம்படும். மாற்றம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top