தமிழ் ஜோக்ஸ் - Kadi Jokes in Tamil

Vizhimaa
0

தமிழ் கடி ஜோக்ஸ் - Kadi Jokes in Tamil 

நம் வாழ்க்கையை அழகாக்குவது சின்ன சின்ன நகைச்சுவைகள் தான் இந்த பதிவில் அந்த சின்ன சின்ன நகைச்சுவைகளை தான் எப்படி சேர்ப்பது என்பதை எடுத்துக் காட்டியுள்ளோம்.
சிரித்தாள் மனிதர்களின் ஆயுள் கூடுமாம் சிரிப்புதான் மனித இனத்தின் உச்சம் பெற்ற குணாதிசயமாம். எந்த விலங்கினத்தாலும் நிச்சயம் சிரிக்க முடியாது ஆனால் சிரிப்பு என்ற ஒரு வரத்தைப் பெற்ற இனம் மனித இனம் மட்டுமே!

Kadi Jokes in Tamil

1.

அப்பா: உன் வகுப்புல மொத்தம் 53 பேர் தானே..?

மகன்: அட.. எப்படிப்பா சரியா சொல்றீங்க?

அப்பா: உன் ரேங்க் பார்த்தாலே தெரியுதே..!

2.

அப்பா : டேய், இன்னைக்கு உங்க ஸ்கூல்ல நடந்த ரன்னிங் ரேஸ்ல கலந்துகிட்டியே, பரிசு கெடச்சுதா ?

மகன் : போங்கப்பா, எல்லாரும் எனக்குப் பயந்துட்டு முன்னாடி ஓடிட்டாங்கப்பா !

3.

மகள் : அம்மா ஏன் தூங்கும்போதும் கண்ணாடியை கலட்டாம தூங்குறீங்க..

அம்மா : அப்பதாண்டா தூக்கத்தில் வரும் கனவு தெளிவா தெரியும் அதான்..


4.

பையன்: ஏ‌ம்மா இ‌ந்த மரு‌ந்து பா‌ட்டிலை கைலவ‌ச்‌சி‌க்‌கி‌‌ட்டு தட‌வி‌க்‌கி‌ட்டு இரு‌க்க?

அம்மா: கா‌ல் வ‌லி‌ச்சா இ‌ந்த மரு‌ந்தை தடவணு‌ம்னு டா‌க்ட‌ர் தா‌ம்பா சொ‌ன்னாரு


5.

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...

அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியது தானே ?

பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.

6.

மகன் : அப்பா நம்ம வீட்டில காக்கா கத்துனா ரிலேடிவ்ஸ் வருவாங்கால?

அப்பா: எஸ்

மகன்: அப்படின எப்போ திரும்பி போவாங்க?

அப்பா: உங்க அம்மா கத்தினா போய்டுவாங்க.

7.

நண்பன் 1 : எங்க அப்பா சம்பாதிச்ச எல்லாத்தையும் குடிலயே அழிச்சுட்டாரு டா.

நண்பன் 2 : அடப்பாவமே! உனக்கு எதுவுமே வைக்கலயா?

நண்பன் 1 : ஒரு சொட்டுகூட வைக்கல.

8.

மன்னர்: வர வர வேலையாட்களுக்கு மன்னர்மீது பயமே இல்லாதது போல தெரிகிறது அமைச்சரே..

அமைச்சர்: ஏன் மன்னா?

மன்னன்: யாரங்கே என்று கேட்டால்,யாருமில்லை என்று எதிர் பதில் வருகிறது!

9.

பையன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?

அம்மா : விமலா டா...

பையன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்.

10.

"ஏன் தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா?"

"கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!"

Tamil Mokka Jokes - தமிழ் மொக்க ஜோக்ஸ்;

11.

டாக்டர்: நீங்க ஒன் அவர் முன்னால கூட்டிட்டு வந்திருந்தா... இவர காப்பாத்தி இருக்கலாம்..!

உறவினர்: நான் என்ன டாக்டர் செய்யிறது? ஆக்ஸிடெண்ட் நடந்தே கால்மணி நேரந்தான் ஆகுது? 

12.

ஆசிரியர் : நீ  உயரமா வளரனும் னா என்ன செய்ய செய்யனும்?

மாணவன் :  ஹை ஹீல்ஸ் ஷூ வாங்கி போடணும் சார்!

13.

மாணவி 1: நீ ஒரு லூசுடி 

மாணவி 2: நீ தாண்டி லூசு 

ஆசிரியர் : அங்க என்னங்கடி சத்தம் இங்க நா ஒருத்தி இருக்கறது உங்க கண்ணுக்கு தெரியலையா

14.

ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க?

மாணவன்: நீங்கதான் சார் நேத்து சொன்னீங்க துன்பம் வந்தா  சிரிக்கனும்னு, அதான்...... சார்

15.

குமார்: டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற? 

கார்த்தி: தேஷ்வா பவுடர்.

குமார்: என்ன செண்ட் யூஸ் பண்ணற?

கார்த்தி: தேஷ்வா செண்ட்.

குமார்: என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?

கார்த்தி: தேஷ்வா ஹேர் ஆயில்.

குமார்: ஓ, தேஷ்வா அவ்வளவு பெரிய பிராண்டா?

கார்த்தி: இல்லடா, தேஷ்வா என் ரூம் மேட்.

16.

பாபு: இந்த SMS-ஐ ஸ்மெல் பண்ணு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?

ராம்: இல்லையே!

பாபு: அதுசரி, சும்மாவா சொன்னாங்க கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!

17.

நண்பன் 1: என் மச்சா இந்த முறையும் Lovers Day கொண்டாடல போல?

நண்பன் 2: எதுக்கு மச்சா எவனோ கட்டிக்கப்போற ஃபீகருக்கு எதுக்கிடா நாம விழா கொண்டாடனும்..

18.

சிவா: ஜனவரி-14 க்கும், பிப்ரவரி-14 க்கும் என்ன வித்தியாசம்? 

ஜீவா: ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி-14! அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி-14!! 

19.

ராமன்: என் மனைவி என்னை தெய்வமா மதிக்கிறாங்க.

தாமன்: அப்ப உங்களை மனுஷனாவே மதிக்கறதில்லைன்னு சொல்லுங்க

20.

ஒருவர்:படிக்கிற  பையனை ஏன் சார் இப்படி அடிக்கறீங்க?

அப்பா: சும்மா இருங்க சார்.. Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்!

தமிழ் கணவன் மனைவி கடி ஜோக்ஸ் - Husband and Wife Kadi Jokes in Tamil

21.

girl : எக்ஸாம் டைம்ல நாங்க டி.வி, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்.

boy : இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்.

girl : 😊😊

22.

ஒருவர் : என்னங்க பொண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க?

மற்றவர் : நாங்க  தான் சொன்னோம் ல. பொண்ணு இருக்கிற எடமே தெரியாதுன்னு!

23.

நண்பன் 1 : சோப்பு டப்பாவுல எதுக்கு சின்னச் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா ?

நண்பன் 2 : தெரியலயே......

நண்பன் 1 : பெரிய ஓட்டை இருந்தா, சோப்பு கீழே விழுந்திடும் !

24.

நண்பன் 1: என் பொண்டாட்டி கையால விஷத்தக் கொடுத்தாகூட குடிச்சிடுவேன்டா.

நண்பன் 2 : உன் பொண்டாட்டி மேல அவ்வளவு பிரியமா?

நண்பன் 1: நீ வேற.. அவக்கூட வாழறதை விட, விஷத்தக் குடிச்சிட்டு சாகறது மேல்..

25.

நண்பன் 1 : அந்த ஜோசியர் கல்யாணம் பண்ணிக்கிட்டா தோஷம் எல்லாம் போயிடும்னு சொல்றாரே......

நண்பன் 2 : அவர நம்பாத.. அவர் சொல்ற தோஷம், சந்தோஷம்.

26.

ஆசிரியர்: என் வகுப்பு நேரத்துல வெளியில நில்லு அப்போ தான்டா உனக்கு அறிவு வரும்.

மாணவன்: அப்போ நீங்க பாடம் நடத்தி  அறிவு வரப்போறது இல்ல?

27.

ஆசிரியர்: நான்லாம் தினமும் 7 மைல்  நடந்து போய் படிச்சன்...

மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...

28.

ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன் ?

மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார் !

29.

கனவன் : அநாவசியமா! எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை எழுப்பாத! தாங்க மாட்ட!.

மனைவி : பூனைக்குட்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்!.

30.

மனைவி : ஷில்பா யாரு‌ங்க?

கணவன் : ‌‌முழிச்சிக்கிட்டே,அது கு‌திரை‌ ரேஸ் ல நான் பந்தியம் கட்டும் குதிரையின் பெயர், ஏ‌ன் கேட்குற?

மனைவி : அப்படியாங்க, அந்த பந்தய குதிரை இன்னைக்கு மதியம் உங்களுக்கு கால் ப‌ண்ணு‌ச்சிங்க.. அதா‌ங்க கே‌ட்டன்.

Mokka Jokes In Tamil;

31.

மனைவி : மாமா, என் டெலிவிரி டைம் ல உனக்கு உதவியா இருக்க அம்மாவ வர சொல்லட்டுமா?

கணவன் : வயதான காலத்தில் அவங்களை ஏன் சிரமப் படுத்துறே! பேசாம உன் தங்கையை வரவழைச்சிடு!

32.

கணவன் : ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி : ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?

33.

ஆசிரியர்: அமெரிக்கா எங்கே உள்ளது.

மாணவன்: தெரியாது சார்.

ஆசிரியர்: பென்ஜின் மேல் ஏறி நில்லுடா.

மாணவன்: ஏறி நின்னா தெரியுமா சார்.

34.

ஆசிரியர் 1: ஏன் சார் அந்த மாணவன பெஞ்ச்ல நிக்கவச்சிட்டீங்க?

ஆசிரியர் 2: வீரபாண்டிய கட்டபொம்மன தூக்குல போட்டது எங்கடா னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...

35.

ஆசிரியர் : கணக்குப் பரீட்சைல எல்லாக் கேள்விக்கும் ஏணிப்படியை வரைஞ்சு வச்சிருக்கியே, ஏண்டா?

மாணவன் : கணக்குல ஸ்டெப்புக்குத்தான் மார்க்குன்னு நீங்கதானே சார் சொன்னீங்க!

ஆசிரியர் : ????????

36.

ஆசிரியர் : காந்திக்கும் ஏசுக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள ஒத்துமை என்ன?

மாணவன் : எல்லாருமே அரசு விடுமுறை அன்று பொறந்தவங்க .... சார்

ஆசிரியர் : ???????????

37.

ஆசிரியர் : இரண்டாம் புலிகேசி எப்போது முடிசூட்டிக் கொண்டார்..? 

மாணவன் : முதலாம் புலிகேசி இறந்த பிறகு சார்..!

38.

ஆசிரியர் : பஸ் கண்டெக்டரிடம் 1 ரூபாய் கொடுத்துட்டு 85  பைசாவிற்கு டிக்கெட் வாங்கினா மீதி உங்களுக்கு எவ்ளோ தருவாரு?

மாணவன் : ஜேஞ்ச் இல்லைனு சொல்லுவாரு ?

39.

ஆசிரியர் : டேய் நல்லா படிச்சா என்னய மாதிரி ஆகலாம்....

மாணவன் : அதனால தான் படிக்கவே வெறுப்பா இருக்கு சார்...!

40.

சர்தார் 1: டேய் எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?

சர்தார் 2: கரண்ட் இல்லடா..

சர்தார் 1: சரி! சரி, பேனையாவது போடு..

சர்தார் 2: லூசாடா நீ? மெழுகுவத்தி அணைஞ்சிடாது?

ஆசிரியர்-மாணவன் கடி ஜோக்ஸ் - Teachers and Students Kadi Jokes in Tamil

41.

நெப்போலியன் : என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது!!

சர்தார்ஜி : இப்போ சொல்றதுல என்ன புன்னியம், அகராதிய வாங்குறப்பவே பார்த்து வாங்கணும்..

42.

இண்டர்வியூ அதிகாரி : வேலைக்கு சேரும்போது மாதம் 4000 ரூபாய் சம்பளம். அஞ்சு மாசத்திலிருந்து சம்பளம் 10000 ரூபாய்.

சர்தார்ஜி : சரிங்க சார், நான் அப்போ அஞ்சாவது மாசமே வேலைக்கு வந்துடுறன் சார்.

இண்டர்வியூ அதிகாரி : ??????

43.

டாக்டர் : இந்த பிரச்சன சரியாக டெய்லி 15 டம்ளர் தண்ணீர் குடிக்கணும்!

நோயாளி : அது மட்டும் முடியாது டாக்டர்!

டாக்டர் : ஏன்?

நோயாளி : என் வீட்டுல 3 டம்ளர் தான் இருக்கு டாக்டர்.

44.

கணவன் : ஏன்மா?ரெண்டு கண்ணும் நல்லா தானே இருக்கு, ஒழுங்கா அரிசில இருக்க கல்லைப் பொறுக்க மாட்டியா?

மனைவி : உங்களுடைய எல்லா பல்லும் நல்லாதாங்க  இருக்கு.கல்லை கடிச்சு திங்க கூடாதா?

45.

கணவர் : டாக்டர்... என் மனைவி தெரியாம கூல்ரிங்ஸ் னு  நினைச்சிட்டு  பாட்டில்ல இருந்த பெட்ரோல குடிச்சிட்டாங்க.. என்ன பண்ணுறது தெரியல டாக்டர் ?

டாக்டர் :68 கிலோ மீட்டர் தூரத்த 1 மணி நேரத்துக்குள்ள ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போயிடும்..

46.

கணவர்: இன்னைக்கு டீ கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கே.. என்னமா கலந்த?

மனைவி: ஓரு டீஸ்பூன் சிமெண்ட் கலந்தங்க...

47.

கணவன்: ஏன்மா? இவ்ளோ நேரமா நான் கரடி மாதிரி கத்திக்கிட்டு இருக்கன். நீ பதிலே பேசமா போனா என்ன அர்த்தம்?


மனைவி: ஏங்க,எனக்கு கரடி பாஷை தெரியாதுன்னு அர்த்தங்க...

48.

கணவன் : சக்கரை டப்பாவில் ஏம்மா? உப்புன்னு எழுதி வச்சிருக்க?

மனைவி : எறும்ப ஏமாத்த தாங்க...!

49.

மனைவி : உங்க அம்மா என்ன இப்படி எல்லாம் திட்டறாங்களே.. கொஞ்சமாவது கேட்க மாட்டீங்களா ?

கணவன் : நல்லா கேட்டுட்டு தான் மா இருக்கன் ?

50.

கணவன் : நீ  எனக்கு பொண்டாட்டியா! வருவேன்னு எங்க டீச்சர் அப்பவே எங்கிட்ட சொன்னங்க.

மனைவி : எப்படி கரக்ட்டா? சொன்னாங்க..

கணவன் : பண்ணி மேய்க்க தான்டா நீ எல்லாம் சரிப்பட்டு வருவன்னு சொன்னங்க.

சர்தார்ஜி கடி ஜோக்ஸ் - sardhar ji kadi Jokes in Tamil

51.

கணவன் : சாமிகிட்ட என்னம்மா  வேண்டிக்கிட்ட?

மனைவி : ஏழேழு பிறவியிலும், நீங்கதான் எனக்கு புருஷனா வரனும்-னு வேண்டிகிட்டேன். நீங்க?

கணவன் : இது 7 பிறவியா இருந்திடனும்-னு வேண்டிகிட்டேன்மா!!!....

52.

மனைவி : ஏங்க? டீ வி யில ஜல்லிக்கட்டு பாக்குறிங்கலே ! அவ்ளோ பிடிச்சிருந்தா நேர்லயே போய் மாட்ட அடக்க வேண்டியது தானே!

கணவன் : கட்டுன மாட்டையே என்னால் அடக்க முடியலங்கும்போது... கயிறு கட்டாத மாட்டை எப்படி அடக்குறது யோசிட்டு இருக்கன்??

53.

கணவன் : அப்படி என்னதான் தலை போற விஷயம் னு அவசர அவசரமா பஸ் பிடிச்சு என் ஆபிசுக்கே வந்திருக்குற?

மனைவி : ம்ம்ம்... நம்ம வீட்டுல வேலை செஞ்ச வேலைக்காரியைக் காணோம். அதான் நீங்க ஆபிஸ்ல இருக்கீங்களான்னு பாத்துட்டு போக வந்தன். 

54.

மனைவி : டிபன் வேணுமாங்க?

கணவன் : சாய்ஸ் இருக்கா?

மனைவி : ரெண்டு சாய்ஸ் இருக்குங்க!

கணவன் : என்னன்ன அது?

மனைவி : தேவையா? தேவை இல்லையா?

55.

கணவன்: உன்ன கல்யாணம் பண்ணதுக்கு பதிலா ஒரு எரும மாட்டைக் கல்யாணம் பண்ணியிருக்கலாம்.

மனைவி:அதுக்கு அந்த எருமை மாடு ஒத்துக்கனுமே?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top