கிட்னியில் கல்லா?வீட்டில் இருந்தே ஈசியாக கரைக்கலாம் ! Kidney Stone Home Remedies in Tamil

Vizhimaa
0

கிட்னியில் கல்லா?வீட்டில் இருந்தே ஈசியாக கரைக்கலாம் ! Home remedies for kidney stones in Tamil 

நவீன வாழ்க்கை மாற்றத்தில் பலருக்கும் உடல் உழைப்பு குறைந்து கொண்டே வருகிறது.நம் உடலின் தேவைக்கு ஏற்ற மாதிரி தண்ணீர் குடிப்பதை குறைத்துக்கொண்டு விடுகிறோம்.
ஆனால் சராசரியாக ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணியானது தேவைப்படுகிறது.


ஆனால் நான் ஏசியில் வேலை பார்க்கிறேன். எனக்கு தண்ணீர் தாகமே ஏற்படுவது இல்லை.நான் ஜிம் கு செல்கிறேன்,workout செய்கிறேன் என்று கூறிக்கொண்டு தண்ணீர் அதிகமாக குடிக்காமல் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது.

இதன் விளைவாக உடலில் ஏற்படும் முதல் மாற்றம் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல்...பின்பு கிட்னி எனப்படும் சிறுநீரகத்தில் கல் உருவாவது.இந்த இரண்டு பிரச்சனையும் இருந்தால் உடலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்றப்படுகிறது என்றே அர்த்தம்.


சரி நீங்கள் சிறுநீரகத்தில் எரிச்சலாக இருக்கிறது என்று மருத்துவமனை சென்று பரிசோதித்து உங்களுக்கு கிட்னியில் கல் இருக்கிறது என்று கூறி ஆப்ரேஷன் செய்ய வேண்டும் மாத்திரை சாப்பிட வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்களா?


உங்களுக்கு பொறுக்க முடியாத வலி இருந்தாலோ அல்லது கிட்னியில் கல்லின் அளவு 6 ல் இருந்து 7 mm அளவிற்கு அதிகமாக இருந்தாலோ மருத்துவர் கூறுவதை நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

ஆனால் ஒருவேளை உங்களுக்கு கல்லின் அளவு 6 mm க்கு குறைவாக இருந்தால் உங்களால் அந்த கல்லை நிச்சயம் வீட்டில் இருந்தே கரைக்க முடியும்.


கிட்னியில் உள்ள கல்லை வீட்டில் இருந்தே கரைக்க சுலபமான வழிகள்; Home Remedies For Kidney Stone  in Tamil 


  1. தினமும் 3‌‌ ல் இருந்து 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது கட்டாயம் ஆகும்.நீங்கள் எவ்வளவு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் நீரை அதிகமாக அருந்தினால் தான் அது பலன் அளிக்கும்ஏதோ மருந்து மாத்திரையில் மட்டும் கல் கரைந்துவிடாது.அதே போல் 5 mm அளவிற்கு குறைவாக கல் இருப்பவர்களுக்கு தினமும் மேல் குறிப்பிட்ட அளவு நீரை தினமும் நீரை அருந்தினாலே நிச்சயம் கல் கரையும்.
  2. சிறுநெருஞ்சில் முள் உங்கள் வீட்டு தோட்டங்களிலோ அல்லது காளியான வெளிப்பரப்பிலோ வளர்ந்து இருக்கும் பச்சையாக இருக்கும் நெருஞ்சி முள்களை பறித்து தினமும் காலை மாலை என இருவேளையும் கசாயம் வைத்து வடிகட்டி  வெறும் வயிற்றில் குடித்து வந்தால் 2 வாரங்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறும்.
Home remedies for kidney stones in Tamil


  1. உங்கள் வீட்டை சுற்றி நெருஞ்சி முள் கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் சிறு நெருஞ்சி முள் பொடி செய்து கிடைக்கும் அதை வாங்கி கசாயம் வைத்து குடிக்கலாம்.
  2. வாழைத்தண்டு உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது ஏழு நாட்களுமே பொறியல் செய்தோ அல்லது சூப் வைத்தோ குடித்து வரலாம்.வாழைத்தண்டும் சிறுநீரகத்தில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாகும்.
  3. சிறுகாண்பீழை பூ எனப்படும் பூவை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புகள் அதிகம், ஆனால் அதன் மருத்துவ குணங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.என்றாலும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.சிறுபீழைப்பூ வயல் வெளிகள் மற்றும் சாதாரணமான இடங்களில் வளர்ந்து நிற்கும் இதன் பூக்கள் தான் விஷேசம்.மாட்டுப்பொங்களின் போது மாடுகளுக்கு அலங்காரம் செய்ய பயன்படுத்தப்படும் செடி வகை தாவரம் ஆகும்.இதன் இலைகள் மற்றும் பூவை சாறு பிழிந்து தினமும் காலை, மதியம், மாலை வெறும் வயிற்றில் 5‌ml அளவிற்கு குடித்து வந்தால் 1 வாரத்திலேயே 5 mm அளவிற்கு குறைவாக உள்ள கற்கள் கரைந்து விடும்.
  4. சிறுகாண்பீழைப் பூவோ அல்லது செடியோ உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சிறுபீழைப் பொடியை வாங்கி தினமும் கசாயம் வைத்து காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் 1 வாரத்திலேயே கற்கள் கரைந்து வெளியேறும்
Home remedies for kidney stones in Tamil


  1. இது எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் வெறும் தண்ணீர் குடித்து மட்டுமே கல்லை கரைக்க முடியும்.நான்கு லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு நல்ல உடல் உழைப்பு செய்தால் நிச்சயம் வெகு விரைவில் கற்கள் கரைந்து வெளியேறும்.
  2. பீன்ஸ் எனும் காய்கறியை உணவில் தினமும் அதிக அளவில் சேர்த்து வந்தாலும் சிறுநீரக பிரச்சனைகள் விற்கும்.
  3. நீர்க் காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
  4. அதிகாலை எழுந்தவுடன் 1 லிட்டில் நீர்மோரில் கற்றாழையை அடித்து சேர்த்து  அந்த பானத்தை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வெகு விரைவில் கற்கள் கரைந்து வெளியேறும்.

நெருஞ்சி முள் காசயம் வைப்பது எப்படி;

பறித்து வைத்திருக்கும் நெருஞ்சி முள்களை கழுவிக்கொண்டு மூன்று கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து 1 கிளாஸ் அளவிற்கு சுண்டிய பிறகு அதை வடிகட்டி குடிக்கலாம்.

சிறுநெருஞ்சில் முள் பொடி வைத்து கசாயம் வைப்பது எப்படி;

கடையில் இருந்து வாங்கி வந்த பொடியை மூன்று கிளாஸ் அளவுள்ள தண்ணீரில் 1 ஸ்பூன் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 1 கிளாஸ் அளவிற்கு சுண்டிய பிறகு அதை வடிகட்டி குடிக்கலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top