அப்பா பிரிவு கவிதைகள்
தண்ணீர் இல்லாத குளத்தில் தத்தளிக்கும் மீன் போல என்
தந்தை இல்லாத உலகில்
தவிக்கிறேன் நான்...அன்புக்காக
என் அப்பாவை போல்
என் மீது பாசம்
வைத்தவர்கள் யாரும்
இல்லை...
அப்பா இல்லாத குடும்பம்
ஆணிவேர் இல்லாத மரம்
போல தான்,எப்போது
விழும் என்று யாராலும்
சொல்ல முடியாது
என் உச்சரிப்பு அகராதியில்
இருந்து அப்பா என்ற
சொல் உதிர்ந்து போனதை உணர்கிறேன்...
என்னை தோலில் சுமந்த
வரை இன்று நான்
தோலில் சுமந்து செல்கிறேன்
உயிரற்ற நிலையில்...
ஒரு ஆணுக்கு அப்பாவின்
அருமை திருமணத்திற்கு
பின்பே தெரியும்...
பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவது தான்
தந்தைகளின் வாழ்நாள் கனவு...
அப்பா இல்லாத போது
உணர்கிறேன் வாழ்க்கையில்
அப்பா எவ்வளவு முக்கியம் என்று...
நீ இல்லாத ஒரே காரணத்தால் சொந்தங்களின் காலடி நம்
வாசப்படியை தொடுவதே
இல்ல பா...
சொந்தக்காரர்களின்
உண்மையான முகம்
அப்பா இல்லாத
போது தான் தெரிகிறது...
அப்பா இருந்திருந்தா இப்போ
எப்படி இருக்கும் னு அடிக்கடி
நினச்சி பாக்குறன் அவர்
இல்லாத இந்த நேரத்துல...
அப்பாவை போல்
அரவணைக்கவும் அன்பு
காட்டவும் இன்னொரு
ஆண் கிடைப்பது கஷ்டம்..
வாழ்க்கையின் மீது எனக்கிருக்கும் நம்பிக்கை என் அப்பா தான்
என்று அவர் இல்லாத போது
தான் உணர்ந்தேன்...
இன்னும் ஒரு முறை என்
அப்பாவின் தோல்களில்
ஏறி ஊரை சுற்ற மாட்டோமா
என்று ஏங்குகிறது என்
உள்ளம்,அவர் இல்லாத
நிலையில்...
அப்பாவின் கை பிடித்து
சாலையை கடந்து
நியபகங்கள் நிறைந்து
வழிகிறது என் கண்ணீராக...
அப்பாவின் கையை
பிடித்துக்கொண்டு
வாழ்க்கையை கடந்து விடலாம் என்றிருந்தேன்...ஆனால்
அவர் பாதியில் இப்படி
விட்டு செல்வார் என்று
தெரியவில்லை...
என் அப்பாவின் கண்களில்
கண்ணீரை நான் பார்த்ததே
இல்லை; அதனால்தான் தானோ என்னவோ அவர் இருந்த
வரை அவரை நான் புரிந்து
கொள்ளவே இல்லை..
குடும்ப பாரத்தை என்
தோலில் சுமக்கும் போது
உணர்கிறேன் என்னை தோலில் சுமந்தவரின் வலிகளை...
மனதார அப்பாவின்
அன்பை உணரும் போது
அரவணைக்க என்
அப்பா இல்லை
துவண்டு விழுந்த
போதெல்லாம் என்னை
தூக்கிவிட்ட தூங்கா
விளக்கு தான் என் அப்பா...
அப்பா இல்லாத போதுதான் தெரிந்தது,அப்பா இருந்தால்
தான் எல்லா சொந்தங்களும் நிலைக்கும்;அவர் இல்லை
என்றால் நடிக்கும் என்று
நான் ஆசைப்பட்ட அனைத்தையும் கொடுத்த என் அப்பாவிடம்
மீண்டும் ஒரு முறை, அப்பா
நான் ஆசையாக கேட்கிறேன்
திரும்பி வந்து விடுங்கள்!
இளமையில் ஆயிரம்
உறவுகள் நம்முடன்
இருந்தாலும் அப்பா
என்ற உறவு உன் அருகில்
இல்லை என்றால் நாம்
அனாதைக்கு சமம் தான்
நான் அழும்போது என்
அப்பாவின் நியாபகமே அதிகம் வருகிறது, ஏனென்றால்
என் அப்பா இருந்திருந்தால்
என்னை அழ விட்டிருக்க
மாட்டார் என்ற எண்ணமே
அப்பா இல்லாத வாழ்க்கையை
வாழும் போது தான் தெரியும்
அப்பா என்பது வார்த்தை
இல்லை; வாழ்க்கை பாடம்
என்று
ஒரே நேரத்தில் கண்களில் கோவத்தையும்,இதயத்தில்
அன்பையும் காட்டும் ஒரே
உறவு அப்பா மட்டும் தான்...
என் வாழ்க்கையில் இப்பொழுது அதிகமாக அழைக்க ஆசைப்படும் வார்த்தை அப்பா தான்...ஆனால் இப்போது அவர் இல்லை
என்பது தான் வாழ்க்கையின்
எதார்த்தம்...
அப்பா என்ற ஆலமரம்
என்னோடு இருந்த வரை;
நான் அப்பாவின் நிழலில்
வாழ்ந்த வரை; வாழ்க்கை
என்னும் வெயில்
என்னை சுட்டதே இல்லை...
யார் நினைத்தாலும், என்
வாழ்க்கையில் உன்
இடத்தை யாராலும்
நிரப்ப முடியாது அப்பா!!!
என் தந்தையை இழந்த
பின்பே, வாழ்க்கையில் எதிர்பார்க்கப்படுவது
மட்டும் நடக்காது; நாம்
எதிர்பார்க்காமல் நிறைய
நடக்கும் என்பதை உணர்ந்தேன்...
கனவில் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... கண்களில் இருக்கும் என் அப்பாவை....
அன்பினில் சிறந்தது
தந்தையின் அன்பே
அதுபோல், வலிகளில்
பெரியது
தந்தையின் இழப்பே...
அப்பா...வாழும் வழிகளை வாஞ்சையோடு சொல்லித்
தந்த நீங்கள்,உங்களை
மறக்கும் வழிகளை ஒரு
முறை கூட சொல்லாமல்
சென்றது ஏன்...
யார் மறந்தாலும், மறுத்தாலும்
என் வாழ்க்கையில் உன்
இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...அப்பா..
என்றும் என் பிள்ளை வருத்தப்படக்கூடாது என்று
நினைத்த என் தந்தையின்
நினைவு தான் என்னை
தினம் தினம் வருத்தப்பட
வைக்கிறது..