மகளிர் தின வாழ்த்து கவிதைகள் - woman's day Quotes in Tamil 2023

Vizhimaa
0

மகளிர் தின வாழ்த்து கவிதைகள் - woman's day Quotes in Tamil 

அனைவருக்கும் வணக்கம்...
விழிமாவின் பார்வையில் பெண்கள் எப்போதுமே அற்புதமானவர்கள் தான்...இந்த பகுதியில் கூடுதலாய் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மாதர்களுக்கும் அன்பு தெரிவிக்கும் வகையில் இங்கே வாழ்த்து கவிதைகளையும் அதனூடே...அவர்களின் எண்ணங்களை தெரிவிக்கும் வகையில் சில கவிதைகளும் இங்கே பதிவிடப்படுகின்றன...

Woman's day Quotes in Tamil 2023

எல்லா பெண்களுக்கும் தன் 
வாழ்க்கையின் ஏதோ ஒரு
சூழ்நிலையில் தன் 
சுற்றத்தாரிடமிருந்து தான் ஒரு
சிறந்த பெண்மணி என்ற 
வார்த்தையை கேட்பது 
தேவையாய் இருக்கும்...
ஆனால் காலமும் மனிதர்களும்
பெண்களுக்கு அதை தருவதே
இல்லை....இந்த நொடி இந்த 
விழிமா வலைத்தளத்தின் வழியாக
உங்களுக்காக ஒன்று சொல்ல விரும்புகிறேன்....


"நீ இந்த உலகத்தின் சிறந்த பெண்மணி என் சினேகிதியே"!

Woman's day Quotes in Tamil 2023

சமையலறையின் நெருப்பில்
வெந்தது விறகுகள்
அல்ல தன்னுடைய சிறகுகள்
என்று அறியாமல் போனோர்
எத்தனை கோடி....
அத்தனை அணையா
தீபங்களுக்கும் சேர்த்து
மதிப்பளிப்போம்....மகளீர்
தினத்தில்...

Woman's day Quotes in Tamil 2023

ஓர் உடலில் இரு இதயத்தை 
சுமக்கும் வரம் பெற்று
விலைமதிப்பற்ற செல்வமாய்
வீட்டிற்கும் நாட்டிற்கும்
இருப்பவள் பெண்...
இனிய மகளீர் தின 
நல்வாழ்த்துக்கள்


நீர் இன்றி அமையாது
உலகு...
பெண் இன்றி அமையாது
நல்வாழ்வு...

Woman's day Quotes in Tamil 2023

தன் கண்ணீரை 
மறைத்துக்கொண்டு
பிறர் கண்ணீரை துடைக்கும்
பெண்ணை போற்றுவோம்
வணங்குவோம்...

Woman day Quotes in Tamil

தாயாய்
தங்கையாய்
மனைவியாய்
மகளாய்...
தோழியாய்
தேவதையாய்...
மூத்தவளாய்...
முகவரியாய்...
உங்கள் வாழ்வில்
இருக்கும் அனைத்து
பெண்களுக்கும் இனிய
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 



ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளாய் சிறகுகளற்ற
பறவைகளாய் வாழ்ந்த
மாதர்களுக்கு சிறகுகளை
விரிக்க காலம் வழிவிடட்டும்....
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்



உறவுகளை கட்டி காப்பதிலும்
உணர்வுகளை கட்டுப்படுத்துவதிலும்
உயர்ந்தவள் உணர்ந்தவள்
பெண்ணே!
ஒவ்வொரு பெண்ணும்
மரியாதைக்குரியவளே....

Woman's day Quotes in Tamil

குடும்பம் எனும்
ஒற்றை சொல்லில்
ஒட்டுமொத்த கனவுகளையும்
கைகழுவிய பெண்கள்
எத்தனை கோடி....
தியாகங்களின்  தீபங்களுக்கு
இனிய மகளீர் தின
நல்வாழ்த்துக்கள்....



பத்து மாதம் சுமந்தவளும்
ஆயுள் முழுக்க சுமப்பவளும்
உடன் பிறந்தவுளும்
உறவாடும் தோழியும்
உன் வாழ்க்கையின்
உன்னதங்கள்....

Woman's day Quotes in Tamil

சமூக அநீதிகளை
சுமந்து சுமந்து
சல்லடையாய் உடைந்த
எங்கள் உள்ளங்களை
உறுப்படுத்த உணர்வு
கொள்ளுங்கள் மானிடமே...



சோதனைகளின் விளிம்பில்
எங்கள் சாதனைகளை
தொடங்குகிறோம்.... நாங்கள்

Woman's day Quotes in Tamil 2023

நீ சிறந்தவள்
என்பதை யாருக்கும்
நிரூபித்து காட்ட
வேண்டிய அவசியமில்லை...
மகளீர் தின நல்வாழ்த்துக்கள்

Woman's day Quotes in Tamil 2023

குடும்பத்திற்காக
உழைக்கும் ஒவ்வொரு
பெண்ணும் கொண்டாடப்பட
வேண்டியவள் தான்...
இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்

Woman's day Quotes in Tamil 2023





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top