அம்மா கவிதைகள் - Amma Kavithaigal

Vizhimaa
0

அம்மா - கவிதைகள் -Amma Quotes in Tamil

"அம்மா!!! 
பிறக்கும்  வரை
கருவினில் சுமக்கிறாள்,
இறக்கும் வரை
இதயத்தில் சுமக்கிறாள் 
தன் பிள்ளையை"

Amma Kavithaigal

"அம்மா! 
இந்த உலகம் 
ஏற்றுக்கொள்ளாத 
முதல் அதிசயம்"


ஆம் தாய்மை என்ற உணர்வே ஒரு அதிசயம் தான்.தன்னலமற்ற உறவுகள் உதிரிகளாய் கிடைக்கும் இந்த உலகில் முதன்மையாய் முதலும் முடிவுமாய் கிடைக்கும் ஒரே உறவு அம்மா!!!

"ஐம்பது வயது ஆனாலும்
அம்மாவின் கண்களுக்கு
மட்டும் நான் குழந்தையாகவே
தெரிகிறேன்"

Amma Kavithaigal


"எல்லோர் வாழ்விலும் அம்மாவுக்கு
என்று நிச்சயம் ஒரு தனி இடம்
உண்டு,
ஏனென்றால் தனக்கு என்று
அவள் வாழாமல் போனதால்!"

Amma Kavithaigal in Tamil

"கடவுளால் எல்லோருக்கும் தரிசனம்
தர முடியாது; ஆனால் நாம்
தினம் தினம் தரிசிக்கும் கடவுள்
அம்மா!"

Amma Kavithaigal in Tamilஏன் எல்லோரும் அம்மாவை கடவுள் ,தெய்வம் என்று சொல்கிறார்கள்,ஏனென்றால் மனிதனையும் மற்ற உயிரினங்களையும் படைத்தது கடவுளாக இருக்கலாம்.ஆனால் மனிதனில் இருந்து இன்னொரு உயிரை கொடுக்கும் பரிணாமத்தை பெற்ற பெண்ணை,அம்மா என்றும் கடவுள் என்றும் தான் அழைக்க வேண்டும்.

எல்லாவற்றையும் மிஞ்சிய
இயற்கை கூட சில சீற்றங்களை
கொண்டிருக்கும்...ஆனால்
எல்லாமுமாக இருக்கும்
என் தாயிடம் எதையும் 
கண்டதில்லை, அன்பை தவிர...

மனதில் தோன்றும் 
சின்ன சின்ன ஆசைகளை
கூட தன் பிள்ளைகளுக்காக
மனதோடு புதைத்துக் கொண்டு
தவம் போல் ஒரு வாழ்க்கையை 
வாழும் அம்மாவை என்னவென்று
சொல்வது....!

Amma Kavithaigal in Tamil

"எத்தனையோ பெண்களின்
தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கிறது
அம்மா என்ற ஒற்றை 
வார்த்தையால்"

வாழ்க்கையில் எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் வந்த பொழுதும் தான் பெற்ற பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு செல்ல கூடாது என்ற ஒரு தாயின் உணர்வே ,அவளின் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க உறுதுணையாக இருக்கும்.

Amma Kavithaigal in Tamil

உனக்கென ஆசையே
இல்லையா?என்றால்
உன் ஆசைகளை எல்லாம்
நிறைவேற்ற வேண்டும்
அது தான் என்னுடைய
ஆசை என்கிறாள்;என் அம்மா!!!


"நடந்து நடந்து
அசந்து போன அவளின்
உடல் வலியை
வெளிப்படுத்தும்
அவளுடைய பாத வெடிப்புகள்"
அம்மாவின் பாதங்களை ஒருமுறை தொட்டு பார்த்தால் புரிந்துவிடும்,அவளின் வலிகள்.எத்தனை காலம் தூக்கி சுமந்திருப்பாள்,உடல் பிணியால் வாடும் போதெல்லாம் நித்திரை கொள்ளா இரவுகளை கடந்திருப்பாள்.ஏன் ? தன் பிள்ளையின் மீது இவ்வளவு பாசம்....தன் உடலால் பிள்ளையை  சுமந்ததில் வந்த பந்தமா? இல்லை,உயிராய் இன்னொரு உயிரை நேசிக்கும் பந்தம்.

Amma Kavithaigal in Tamil


Amma Quotes in Tamil

"யாருடைய அன்பு 
கைவிட்டாலும்,அம்மாவின்
அன்பு மட்டும் 
கைவிடாது"

Amma Kavithaigal in Tamilஎதை இழந்த போதிலும்
சரிசெய்ய என் அம்மா
இருக்கிறாள் என்ற
எண்ணமே....என்னை
ஓடவைக்கிறது.....எல்லா மொழிகளிலும்
அழகான வார்த்தை
அம்மா!!!

Amma Kavithaigal in Tamil"கை குழந்தையாய்
இருந்த பொழுதும்...
தோளைத் தாண்டி
வளர்ந்த போதிலும்
அம்மாவின் அன்பில்
மட்டும் மாற்றம் என்பதே
இல்லை...."
Amma Kavithaigal in Tamil
"அம்மாவின் சமையலறைக்கு மட்டும் விடுமுறை என்பதே
கிடையாது!!!!
அவளுக்கும் தான்!!!"

"மாற்றம் ஒன்றே மாறாதது" என்ற பொன்மொழிக்கு ஒரே விதிவிலக்கு அம்மா"

Amma Kavithaigal in Tamil


எல்லாம் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகில்,என்றென்றும் நிரந்தரமாய் மாறாமல் திணையளவு குறையாமல் இருக்கும் உறவு அம்மாவும் அவளின் அன்பு மட்டுமே....

Amma Kavithaigal in Tamilஎல்லா உறவுகளையும் விட அம்மா என்ற உறவு ஏன் எப்பொழுதும் சிறப்பானது என்றால்,இவள் தான் மற்ற உறவுகளை நமக்கு அடையாளம் காட்டுகிறாள்....அப்பா உட்பட!!!

அலுவலக வேலை 
பார்ப்பவர்களுக்கு கூட
8 மணி நேரம் தான்
வேலை...ஆனால்
அம்மா என்ற ஒருத்திக்கு
எப்பொழுதும் வேலை
இருந்து கொண்டு தான் இருக்கும்....

Amma Kavithaigal in Tamil

"அம்மா என்று அழைத்தால்
இந்த உலகத்தையே மறந்து
ஓடி வருவாள் அவள் தான்
அம்மா!!!"

"என் கண்களின் வழியே
பார்த்தால் ஏனோ?
உலக அழகிகள் எல்லாம்
தோற்று விடுகின்றனர்...
என் தாயின் முன்னால் !"

Amma Kavithaigal in Tamil

Mother Quotes in Tamil
"அம்மா என்ற உணர்வு
தரும் பலம் போல் 
உலகில் வேறு எதுவும்
இல்லை....""அம்மா என்ற ஒருத்தியை படைக்கும் பொழுது பிரம்மன் மகிழ்ச்சியாய் இருந்தான் போலிருக்கிறது, ஏனென்றால் என் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும் அவளே காரணமாயிருக்கிறாள்"

Amma Kavithaigal in Tamil"தினம் தினம்
கவலை கொள்வாள்!!!
ஒருநாளும் தன்னை
பற்றி கவலைப்பட மாட்டாள்"
அம்மா!!!பேசினாலும் புரியாத
உறவுகளுக்கு மத்தியில்
மௌனத்தை கூட புரிந்து
கொள்ளும் ஒரு உறவு
அம்மா!!!
வேண்டிக் கேட்டாலும்
கொடுக்காத கடவுள்களுக்கு
மத்தியில்
கேட்காமல் வழங்கும்
தெய்வம் உண்டு - அம்மா!!!நிலாவை காட்டி
சோறுட்டினாள்! என் அன்னை...
ஏனோ இன்று தோன்றுகிறது?
நிலவை விட என் அம்மா தான்
அழகு என்று
Amma Kavithaigal in Tamil

அம்மா!!!
என்-
முதல் கடவுள்
முதல் ஆசிரியர்
முதல் தோழி
முதல் தேவதை
முதலும் முடிவும்
அவளே!!!!


அம்மா பற்றிய கவிதைகள்


எனக்கு இது வேண்டும்
என்று கடவுளிடம்
கேட்பதற்கு முன்,
இது வேண்டும் என்று
உரிமையுடன் கேட்கும்
இடம் அம்மா!


மகன் அம்மாவிற்கு எழுதும்
கவிதை

Amma Kavithaigal in Tamilஎன் பார்வையின்
வழியே அவள்
எப்படித்தான் அறிவாளோ?
என் பசியை,
என் குரலின் வழியே
அவள் எப்படி
கண்டறிந்தாளோ?
என் வலியை,
என் முகத்தின்
வழியே அவள்
எப்படி கண்டறிவாளோ?
என் நிலையை....
அம்மா...இருக்கிறாள்
எல்லாமாய்!

அம்மா பாசம் கவிதைகள்


எழுந்தால் அவள்
முகத்தில்
விழுந்தால் அவள்
மடியில் என்ற 
என் வாழ்க்கை
சொர்க்கமாய் இருந்தது
ஒருகாலத்தில்....!!! - அம்மா!

Amma Kavithaigal in Tamil


அம்மா எனும் பாக்கியம்
அனைவருக்கும்
கிடைப்பதில்லை;
இருப்பவருக்கு அவளின் அருமை
புரிவதில்லை
புரிந்தவருக்கு அவள் மீண்டும்
கிடைப்பதில்லை,,,,நிழலின் அருமை
வெயிலில் தான் தெரியும் என்பார்கள், அதுபோலத்தான்
தாயின் அன்பும் அவளி இல்லாத
பொழுது தான் புரியும்
"அம்மாவை அலட்சியப்படுத்தும்
முன் சற்று யோசித்து பாருங்கள்
அவள் இல்லாமல் உங்கள்
வாழ்க்கை எப்படி இருக்கும்
என்று"ஆயிரம் முறை 
நாம் அவளை காயப்படுத்தி
இருக்கலாம்;ஆனால் ஒருமுறை
கூட அவள் தண்டிக்கமாட்டாள்ஆயிரம் காயங்களை
உள்ளுக்குள் சுமந்து
பெற்ற பிள்ளையிடம்
ஆசையாய் நடந்து
கொள்ளும் அம்மாக்கள்
என்றும் அதிசயமே....அம்மா கவிதைகள் வரிகள்கேட்டால் கொடுக்கும்
கடவுளை விட,
கடவுளிடம் இதை
கேள் என்று சொல்லி
கொடுக்கும் என் அம்மா!!!
எனக்கு கடவுளாக தெரிகிறாள்!!!
நான் கேட்பது எதையும்
இல்லை என்று 
சொல்லாததினால்.....


அம்மா தியாகம் கவிதைகள்


கடல் அலையும்...
அம்மாவின் சமயலறையும்
ஒன்று - இரண்டுக்கும்
ஓய்வும் விடுமுறையும்
கிடையாது...

மனதை தொட்ட அம்மா
கவிதை வரிகள்கேட்டதை கொடுக்காத
கடவுள்களுக்கிடையே...
கேட்காமல் கொடுக்கும்
என் அம்மா! கடவுள் தான்

அம்மா கவிதை 4 வரிகள்எப்படி தான்
இப்படி ஒரு வாழ்க்கையை
வாழ முடிகிறதோ? அவளாள்,
எல்லாம் பிள்ளைகளுக்காக
என்று 

அம்மா கவிதை வரிகள் Download


இரவில் லேட்டா
வந்தா,அப்பா
ஏன்டா லேட்டு னு
கேட்பாரு!
பொண்டாட்டி எங்க
போனீங்க இவ்ளோ
லேட்டு னு கேட்பா!
ஆனா அம்மா மட்டும்
தான் சாப்டியா டா! னு
கேட்பா!!!!
அதாங்க அம்மா!ஓர் உறவின் இழப்பை பல
உறவுகள் சேர்ந்தால் தான்
சரி செய்ய முடியும்... ஆனால்
தாயின் இழப்பை மட்டும்.
யாராலும் ஈடு கட்ட
முடியாது....

தாய் கவிதை 10 வரிகள்

என்னை சுமந்தவளை
சுமந்தவளை 
ஒரு முறையாவது
சுமந்து விட வேண்டும்
மறுபிறவியில்  செருப்பாய்
பிறந்தேனும்.....


பிறந்தவுடன் அள்ளி
அணைத்தவள்,என்
அன்னை...இன்று
வரை உணர்கிறேன்
அவளின் அணைப்பை....போதும் என்று
சொன்ன பின்பும்
இன்னொரு தோசை 
வரும் என் அம்மாவிடமிருந்து
வளர்ற பையன் நல்லா
சாப்பிடுடா! என்று


தாய் கவிதை 20 வரிகள்என் உணர்வுகளை
கொட்டி தீர்க்கும்
இடம் அம்மா!!!


Amma kavithai in Tamilஎத்தனை முறை
வீழ்ந்தாலும் மகிழ்ச்சி
கொள்வேன்....என்
தாயின் மடியில்!!!


அம்மா கவிதை 1 வரிகள்


பணத்தால் முடிவாகும்
உறவுகளும்....
பணத்திற்காக வரும்
உறவுகளும் ஊறிப்போன
இந்த உலகில்....அம்மா!!!
பணம் எனும் பொய்யில்
சிக்காத விதிவிலக்கு!!!


Amma Quotes in Tamil


அம்மாவைப் போன்ற
ஒரு உறவை தேடினேன்
இந்த உலகில்,மிஞ்சியது
ஏமாற்றம் மட்டுமே...
ஏனென்றால் தாயை போன்ற
தன்னலமற்ற இன்னொரு உறவை
இறைவன் இந்த உலகிற்கு 
தரவில்லை.


அம்மா - மகள் கவிதை வரிகள்

அம்மாவிற்கும் மகளுக்கும் இடையில் இருக்கும் உறவு என்பது மிகவும் இலகுவான ஒன்று அல்ல.ஒரு தாய் தன் மகளை சற்று கண்டிப்புடன் வளர்ப்பதற்கு காரணம் உண்டு.இந்த சமூகத்தில் என் மகள் எதையெல்லாம் கடந்து வரவேண்டி இருக்கும் என்பதை தெரிந்தே! அந்த தாய்,தன் மகளை வளர்க்கிறார்.ஒன்று இந்த சமூகத்திற்கு ஏற்றாற் போல் வளர்க்க நினைப்பாள். 


"பெண்ணின் கோவங்களுக்கு
மரியாதை கிடைக்கும் இடம்
அம்மா!!!"


"ஒரு பெண்ணின்
முதல் உயிர்த்தோழி
அம்மா!!!"


அம்மா தன் மகளிடம் சற்று கண்டிப்பாகவே நடந்து கொள்வாள்.
கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top